மன்னார் திருக்கேதீச்சர கோவில் பிரதான மண்டபத்தில் இந்து சமய ஆசிரியர்கள்,அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆன்மீக பயிற்சி கருத்தமர்வு -Photos
சிவபூமி இலங்கை  மன்னார்  மாதோட்டம் பழம்பெரும் பாடல் பெற்றதும் நாவலர் பெருமானால்  தேன் பொந்து  என சிறப்பித்து  வழிபடப்பட்ட திருக்கேதீச்சரத் திருத்தலத்தில் சிவராத்திரி மடத்தில் பிரதான மண்டபத்தில் இன்று காலை  24-11-2016- 10 மணியளவில் இந்து சமய கலாசார  அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகைக்கு ஏற்ப கனடா சைவ சித்தாந்த  பீடத்தின் நிறுவனரும்  இந்து சமய ஆர்வலருமான வைத்திய கலாநிதி திரு லம்போதரன் ஐயா அவர்கள் வருகை தந்து இந்து சமய ஆசிரியர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளில் சனாதன தர்மத்தை போதிக்கும் ஆசிரியப்பெருமக்களுக்கு ஆன்மீக பயிற்சி கருத்தமர்வினை நடாத்தினார்
மானுட வாழ்வியலில் சனாதன  தர்மம்  (இந்து சமயம்) காட்டும் நன்னெறி மற்றும் இந்த மானுடப்பிறப்பின் உன்னதமான நிலை பிறப்பு தொடக்கம் இறப்பு வரையுள்ள காலம் ஆத்மாவின் இறுதியான ஒடுக்கும். கர்மாவின் பலாபலன் மற்றும் அறக்கருத்துக்கள் ஊடாக  அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு எவ்வாறான போதனைகளை செய்யலாம் என்பனவற்றை உள்ளடக்கி  இக்கருத்தமர்வு இடம்பெற்றது.
சுமார் 110 ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் விசேட அழைப்பாளர்களாக இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர் வைத்திய கலாநிதி மு. கதிர்காமநாதன் ஐயா அவர்களும் அறநெறிப் பாடசாலை இணையத்தின் தலைவர் மஹா தர்மகுமாரக்குருக்கள் அவர்களும் இந்துக்குருமார் ஒன்றியத்தின் செயலாளர் பிரம்ஸ்ரீ மனோ ஐங்கர சர்மா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.சன்யாசிகளும் கலந்து கொண்டனர்.
சுமார் 110 ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் விசேட அழைப்பாளர்களாக இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர் வைத்திய கலாநிதி மு. கதிர்காமநாதன் ஐயா அவர்களும் அறநெறிப் பாடசாலை இணையத்தின் தலைவர் மஹா தர்மகுமாரக்குருக்கள் அவர்களும் இந்துக்குருமார் ஒன்றியத்தின் செயலாளர் பிரம்ஸ்ரீ மனோ ஐங்கர சர்மா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.சன்யாசிகளும் கலந்து கொண்டனர்.
மன்னார்  திருக்கேதீச்சர கோவில் பிரதான மண்டபத்தில்  இந்து சமய ஆசிரியர்கள்,அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆன்மீக  பயிற்சி கருத்தமர்வு -Photos
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
November 24, 2016
 
        Rating: 
      
        Reviewed by NEWMANNAR
        on 
        
November 24, 2016
 
        Rating: 

No comments:
Post a Comment