அண்மைய செய்திகள்

recent
-

12 வருடங்களின் பின்னர் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்!


12 ஆண்டுகள் சம்பளம் இன்றி சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவருக்கு, சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபா நிலுவைச் சம்பளம் வழங்கப்பட்டது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள நேற்று இந்தப் பெண்ணுக்கு நிலுவைச் சம்பளத்தை வழங்கியிருந்தார்.

வவுனியாவை பிறப்பிடமாகக் கொண்டவரும், தமிழக அகதி முகாமில் வாழ்ந்து வந்தவருமான கோடீஸ்வரி செல்லமுத்து என்ற 35 வயதான பெண் ஒருவருக்கு இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

1981ம் ஆண்டு வவுனியாவில் பிறந்த கோடீஸ்வரி, வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போர் காரணமாக 1985ம் ஆண்டு பாட்டியுடன் தமிழகத்தின் திருவண்ணாமலை அகதி முகாமில் வாழ்ந்து வந்துள்ளார்.

முகாமில் வாழ்ந்து வரும் காலப்பகுதியில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கோடீஸ்வரி இரண்டு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2003ம் ஆண்டு தாய் தந்தையை பார்ப்பதற்காக இலங்கை வந்த கோடீஸ்வரி, மருதானையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனமொன்றில் போலி ஆவணங்களை வழங்கி முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில் சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

2004ம் ஆண்டு ஜனவரி மாதம் சவூதி சென்ற கோடீஸ்வரிக்கு முதல் மூன்று மாதங்களின் பின்னர் சம்பளங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

கடந்த ஒக்டோபர் மாதம் நாடு திரும்பிய கோடீஸ்வரி, சம்பள நிலுவைப் பற்றி இலங்கை வருவதற்கு முன்னதாக சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய அதிகாரிகள் அவருக்கு சேர வேண்டிய சம்பள நிலுவைப் பணத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

கோடீஸ்வரிக்கு இலங்கையில் உறவுகள் எவரும் இல்லை என்பதனால், பயணத்துக்கான ஆவணங்களைத் தயாரித்து அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


12 வருடங்களின் பின்னர் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்! Reviewed by Author on December 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.