அண்மைய செய்திகள்

recent
-

வெடித்துச் சிதறிய கொலம்பிய விமானம்! பதற வைக்கும் வீடியோ காட்சிகள்...



கொலாம்பிய நாட்டில் 6 பேருடன் சென்ற விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை மீறி வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலாம்பிய நாட்டில் German Olano என்ற விமான நிலையத்தில் இருந்து 6 பேருடன் தனி விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.

இவ்விமானம் the Boeing 727 என்ற விமானத்தைச் சேர்ந்தது என கூறப்படுகிறது.

விமானம் Puerto Carreno என்ற விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சிக்கும் போது கட்டுப்பாட்டை மீறி அங்கிருந்த வேலி கம்பிகளை எல்லாம் தாண்டியது மட்டுமில்லாமல், அந்த விமானத்தை வீடியோ எடுத்த முற்பட்ட பொதுமக்கள் பலரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆனால் சிறிது தூரம் சென்ற விமானம் கண் இமைக்கும் நொடியில் வெடித்துச் சிதறியது.

இதில் 5 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் உடனடியாக அருகில் உள்ள San Juan de Dios மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் இந்த விமானம் கொலாம்பிய தலைநகர் Bogota பகுதியில் உயர பறந்த போது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் தான் 77 பேருடன் சென்ற விமானம் கொலாம்பியாவின் Medellin என்ற விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.




வெடித்துச் சிதறிய கொலம்பிய விமானம்! பதற வைக்கும் வீடியோ காட்சிகள்... Reviewed by Author on December 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.