பொருத்து வீட்டுத் திட்டம் பொருத்தமற்றது: ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்
கிளிநொச்சி மாவட்டத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று(24) காலை 10.00 மணிக்கு மாவட்ட அரச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வீடமைப்புத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்ட வேளையில் மாவட்ட கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியத் தலைவர் ஜெயக்குமார் கூறுகையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கும் பொருத்து வீட்டுத் திட்டத்தை உடனடியாக கைவிட்டு மாற்று ஏற்பாடு ஒன்றின் மூலம் வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு” எனத் தனது கோரிக்கையினை முன்வைத்தார்.
கிளிநொச்சி விவசாய அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவமோகன் கூறுகையில், “குறித்த திட்டம் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு எதிரானது. இது தொடர்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நாங்கள் நடத்தியிருக்கின்றோம். இதனுடைய பயன்களை நேரடியாக அனுபவிக்க வேண்டும். விளக்கமற்ற வகையில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து மக்களை குழப்ப வேண்டாம்.
எனவே இந்த பொருத்து வீட்டுத் திட்டத்தினை நிறுத்துமாறு இணைத் தலைவர்கள் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். அதனை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவித்து பொருத்து வீட்டுத் திட்டத்தை நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.
இக்கோரிக்கையினை ஒரு தீர்மானமாக எடுப்பதாக இணைத் தலைவர்களான வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா, பராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
குறித்த தீர்மானம் அரசாங்க அதிபரினால் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பொருத்து வீட்டுத் திட்டம் பொருத்தமற்றது: ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்
Reviewed by Author
on
December 24, 2016
Rating:
Reviewed by Author
on
December 24, 2016
Rating:


No comments:
Post a Comment