இலங்கை தொடர்பான ஜெனிவா யோசனை விலக்கிக்கொள்ளப்படுமா?
இலங்கை படையினருக்கு எதிராக போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெனிவா யோசனையை 2017 மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் விலக்கிக்கொள்வதை ஐக்கிய நாடுகள் அமைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்துள்ளன.
படையினருக்கு எதிரான இந்த யோசனையை விலக்கிக்கொள்ளுமாறு உலக இலங்கையர் பேரவை என்ற சிங்கள அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்ட் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் ஜெனிவா யோசனை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இன்னும் 24 நாட்களின் செயலாளர் பதவியில் இருந்து விலகவுள்ள பான் கீ மூனின் பேச்சாளர் இர்பான் ஹக் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் என்ன செய்வார் என்பதை கூற முடியாது எனவும் ஆனால் ஜெனிவா யோசனையில் மாற்றமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்புடன் காணப்படும் நெருக்கடியான நிலைமை காரணமாகவே குறித்த சிங்கள அமைப்பு இலங்கை ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைன் எந்த பதில்களையும் வெளியிடவில்லை என ஜெனிவா தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள வார பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.
ஜெனிவா யோசனையை தொடர்ந்தும் செயற்படுத்துமாறு கோருவதற்காக புலம்பெயர் ஈழத் தமிழர்கள், மனித உரிமை ஆணையாளரை சந்திக்கவிடுத்த கோரிக்கைக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை.
இதனிடையே கடும் பயங்கரவாத எதிர்ப்பாளரை டரம்ப்ட், அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு இராஜாங்க செயலாளராக அறிவித்துள்ளதால், புலம்பெயர் ஈழத் தமிழர்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் அந்த சிங்கள வார பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
குறித்த சிங்கள வார பத்திரிகை சிங்கள இனவாதத்தை போஷிக்கும் பத்திரிகை என சிங்கள நடுநிலையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த பத்திரிகையின் செய்திகளை விமர்சித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இலங்கை தொடர்பான ஜெனிவா யோசனை விலக்கிக்கொள்ளப்படுமா?
Reviewed by Author
on
December 03, 2016
Rating:

No comments:
Post a Comment