மன்னாரில் கொள்ளையடிக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மீட்பு-இளைஞர் ஒருவரும் கைது.-📷
மன்னாரில் இடம் பெற்ற இரண்டு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த இளைஞர் திருடிய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தெரிவித்தார்.
-மன்னார் பெற்றா பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இரவு கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம் பெற்றது.
இதன் போது சுமார் 5 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தாழிக்கொடி கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச்சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி இரவு மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதன் போது குறித்த வீட்டில் இருந்து சுமார் 6 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச்சம்பவம் குறித்தும் குறித்த வீட்டின் உரிமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில் மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தலைமையில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போது குறித்த கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரை கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.
-குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் மூலம் குறித்த இரு கொள்ளைச்சம்பவங்களுடனும் குறித்த இளைஞனே ஈடுபட்டு வந்தமை தெரிய வந்துள்ளது.
இதன் போது திருடிய தங்க ஆபரணங்கள் மன்னார்,மருதானை,கொழும்பு போன்ற இடங்களில் உள்ள அடகு பிடிப்பு நிலையங்களில் குறித்த தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரின் அனுமதியுடன்,மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோ ஆகியோரின் வழி நடத்தலில் மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தலைமையில் செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் விமுத்தி,பொலிஸ் சாஜன்களான திஸாநாயக்க(41584),ஜயசாந்த(50439),பொலிஸ் கொஸ்தபிள்களான ஜெயசேகர(9927),வசந்த(11619),ரத்னாயக்க(50702) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் குறித்த நகைகளை மீட்டள்ளனர்.
குறித்த நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையிலே அவை மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இளைஞனுக்கு உதவி வழங்கிய கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவரையும் மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு விசாரனைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தெரிவித்தார்.
-மன்னார் பகுதியில் அண்மைக்காலமாக தொடர் கொள்ளைச்சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித கதியில் செயற்பட்டு அண்மைக்காலமாக இடம் பெற்று வரும் கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்படைய நபர்களை கைது செய்துள்ளதோடு, கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களையும் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
(18-12-2016)

Reviewed by NEWMANNAR
on
December 18, 2016
Rating:

No comments:
Post a Comment