ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம்: ஸ்டாலின்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கோரியுள்ளார்.
சென்னையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணி ஆய்வு செய்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து எழுந்து வரும் சந்தேகங்களை திமுக அரசியலாக்க விரும்பவில்லை.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மாறுபட்ட செய்திகள் தொடர்ந்து வெளிவரும் நிலையில், இதுபற்றி உச்சநீதிமன்றத்தில் கூட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை பற்றி தமிழக அரசு எந்த தன்னிலை விளக்கத்தையும் இதுவரை கொடுக்கவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் உண்மையாக இருந்து விடக் கூடாது என்று தான் விரும்புகிறேன்.
ஒருவேளை தமிழக அரசு தனது பொறுப்பில் இருந்து தவறும் பட்சத்தில், மத்திய அரசாவது உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், புயல் நிவாரண பணிக்காக, மத்திய அரசு ஒதுக்கிய ரூ.500 கோடி போதுமானது அல்ல. வந்துள்ள நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேர உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும், முறைகேடுகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என கோரியுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம்: ஸ்டாலின்
Reviewed by NEWMANNAR
on
December 15, 2016
Rating:

No comments:
Post a Comment