பொலிஸாரின் அதிரடி சோதனை நடவடிக்கையில் கறவைப் பசுக்களுடன் வாகனம் அகப்பட்டது
முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயப் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பொலிஸ் நிலையப் பிரிவில் மாங்குளம்-முல்லைத்தீவு வீதியில் மாங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பயணித்த வாகனம் ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போது அனுமதிப்பத்திரம் இல்லாது கறவைப் பசு மாடுகளை கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டு கடத்தப்பட்ட பசு மாடுகளுடன் வாகனம் கைப் பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக மாங் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்,இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
மாங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மாலின் பெரேராவின் உத்தரவுக்கமைய விசேட சுற்றுக் காவல் கடமையில் ஈடுபட்ட உபபொலிஸ் பரிசோதகர் அ.சியாளன் தலைமையில் பொலிஸ் சார்ஜன் நவரட்னா (30863) மற்றும் பொலிஸ் கொஸ்தாபல்களான றுவான் (71524), உதயகுமார (141 04) ஆகியோர் அடங்கிய பொலிஸ் அணியினரின் திடீர் வீதிப்பரிசோதனையில் முல்லைத்தீவில் இருந்து வாகனத்தில் மல்லாவிக்கு கறவைப் பசுக்கள் இரண்டும் கன்றுக்குட்டி ஒன்றும் வாகனத்தில் கடத்திச் செல்லும் போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்டுள்ள தடயப் பொருட்கள் முல்லை.நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக வும் சந்தேக நபர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாங்குளம் பொலிஸ் நிலையத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அதிரடி சோதனை நடவடிக்கையில் கறவைப் பசுக்களுடன் வாகனம் அகப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
December 18, 2016
Rating:

No comments:
Post a Comment