பரீட்சை எழுதுவதில் ஆள்மாறாட்டம் - முல்லைத்தீவில் இருவர் கைது
முல்லைத்தீவு பிரபல பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலையத்தில் க.பொ.த சாதாரண தர கணிதபாட பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் கணித பாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து உரிய பரீட்சார்த்தியையும் கைது செய்துள்ள முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பரீட்சை எழுதுவதில் ஆள்மாறாட்டம் - முல்லைத்தீவில் இருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
December 15, 2016
Rating:

No comments:
Post a Comment