105 வயது முதியவர் ஒருவரின் ஒரு மணி நேர சாதனை!
ஒரு மணிநேரத்தில் 22 கி.மீற்றர் தூரத்தை சைக்கிளில் கடந்து 105 வயது முதியவர் சாதனை படைத்துள்ளார்.
சாதனைக்கு வயது தடை இல்லை என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர் ஒருவர் 1 மணி நேரத்தில் 22.5 கி.மீற்றர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
அவரது பெயர் ராபர்ட் மார்சண்ட். இவர் பிரான்சை சேர்ந்தவர்.
இவர் பாரீஸ் அருகே ஒரு விளையாட்டு மைதான ஓடு தளத்தில் சைக்கிள் ஓட்டினார்.
1 மணி நேரத்தில் இவர் 22.5 கி.மீற்றர் தூரம் ஓட்டி சாதனை படைத்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இவர் தனது 102 வயது வயதில் 26.9. கி.மீற்றர் தூரம் வரை சைக்கிள் ஓட்டியுள்ளார்.
1911-ம் ஆண்டில் பிறந்த இவர் தனது 14 வயதில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகினார்.
தனது 67 வது வயதில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார்.
2012-ம் ஆண்டில் அதாவது தனது 100-வது வயதில் 4 மணி 17 நிமிடம் 27 வினாடிகளில் 100 கி.மீற்றர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தார்.
அதற்காக 6 மாதம் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
105 வயது முதியவர் ஒருவரின் ஒரு மணி நேர சாதனை!
Reviewed by Author
on
January 06, 2017
Rating:

No comments:
Post a Comment