அண்மைய செய்திகள்

recent
-

80 வருடங்களின் பின்னர் சாதனை! ஹைட்ரஜன் உலோகத்தை கண்டுபிடித்த குழுவில் இலங்கையர்....


ஆவர்த்தன அட்டவணையின் முதல் வாயுவாக ஹைட்ரஜன், பலரினால் அடையாளப்படுத்தப்படுகிறது.

எப்படியிருப்பினும் தற்போது முழு பிரபஞ்சத்திலும் உள்ள பொதுவான கனிமான ஹைட்ரஜனை, வரலாற்றில் முதல் முறையாக உலோகமாக மாற்றுவதற்கு விஞ்ஞானிகள் சிலர் செயற்பட்டுள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்ட அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் குழுவில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இயற்கை அறிவியல் பேராசிரியர் - தோமஸ்டீ.கெபட், பேராசிரியர் அய்செக் சில்வேரா மற்றும் பேராசிரியர் ரங்க டயஸினால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கண்டுபிடிப்பு தொடர்பில் 80 வருடங்களுக்கு முன்னர் முதல் கோட்பாடு முன்வைக்கப்பட்ட நிலையில், இதற்காக நோபல் பரிசும் கிடைத்துள்ளது.

சில அணுக்களில், மூலக்கூறுகளின் இயக்கம் வேகத்தை குறைத்தல் மற்றும் கூட்டுவதன் ஊடாக பொருளின் இயற்றையான நிலையை மாற்ற முடியும். மேலும் வெப்பநிலை குறைவடையும் அளவிற்கு அதன் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் நகரும் வேகம் குறைவாக இருக்கும்.

அதற்கமைய, ஹைட்ரஜன் அணுக்களின் இயக்கத்தை குறைப்பதற்கு அதன் வெப்ப நிலையை 5.5 கெல்வின் வரை குறைப்பதற்கு விஞ்ஞானிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த வெப்பத்தின் போது அதன் அளவு அணிக்கோவை அமைப்பு கொண்டுள்ள நிலையில், அதன் பின்னர் 495 ஜிபி பாஸ்கல் (கடல் மட்டத்தில் உணரும் அழுத்தம் போன்று 5 மடங்கு) அளவு அழுதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அதன் அளவு உலோக அணுக்கள் அளவிற்கு ஒன்றோடு ஒன்று நெருக்கமாக மாறிவிடும்.

‘Atomic Metallic Hydrogen’ என பெயரிடப்பட்டுள்ள இந்த உலோகத்தை தயாரிப்பதற்கு இந்த ‘diamond anvil cell’ என்ற உபகரணம் ஒன்றை பயன்படுத்தியுள்ளனர். இந்த இயந்திரத்தினுள் வைத்தே மாதிரியை அழுத்தத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

செயற்கை வைரத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்தின் மீது அலுமினிய ஒக்சைட் படலம் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. வைரத்திற்குள் ஹைட்ரஜன் அணுக்கள் நுழைவதனை தடுப்பதற்காகவே அவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு வைரம் பயன்படுத்துவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று அது உலகின் வலுவான பொருளாகும், மேலும் வைரத்தின் ஊடாக வெளிச்சத்திற்கு பயணிக்க முடியும் என்பது காரணமாகும்.

இவர்களின் இந்த ஆய்வு தொடர்பில் விஞ்ஞானிகளின் கடிதம் “Science” எனப்படும் ஒரு அறிவியல் இதழில் உட்பட பதிவிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் அரை வெப்பநிலையில் கடத்தி ஒன்றை கண்டுபிடித்தால் அதன் ஊடாக போக்குவரத்து வேலை, மின்சார கார் மற்றும் ரொக்கெட் தயாரிப்பு மாற்றங்களை மேற்கொள்ள கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

80 வருடங்களின் பின்னர் சாதனை! ஹைட்ரஜன் உலோகத்தை கண்டுபிடித்த குழுவில் இலங்கையர்.... Reviewed by Author on January 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.