அண்மைய செய்திகள்

recent
-

ஒன்பதரை கோடி செங்கற்களால் கட்டப்பட்ட இலங்கையின் இரும்புக் கோட்டை! எகிப்திய பிரமிட்டுக்கு இணையான சாதனை!


ஆயிரக்கணக்கில் செங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட மாளிகைகளை பார்த்திருப்போம், லட்சக்கணக்கில் கற்களை கொண்டு கட்டப்பட்ட கட்டடங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு கோடியல்ல இரண்டு கோடியல்ல ஒன்பதரை கோடி செங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட கோட்டையை பற்றி தெரியுமா?

அதுவும் இலங்கையில் இவ்வாறான ஒரு கோட்டை உருவாக்கப்பட்டிருக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஆம் ஒன்பதரை கோடி செங்கற்களால் கட்டப்பட்ட உலகின் முதலாவது கட்டிடம் இலங்கையில் உருவாக்கப்பட்ட ஜேதவனராமய விகாரை.

இலங்கையின் இரும்புக்கோட்டை எனவும் வர்ணிக்கப்படுகிறது

கி.மு 276 - 303 காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த மகாசேன மன்னனால் இத்தூபி நிர்மாணிக்கப்பட்டது இத்தூபி அமைந்துள்ள பகுதியில் அதற்கு அண்மித்ததாக பொருளாதார நடவடிக்கைகளுக்கான கட்டடத்தொகுதியொன்றும் அமைக்கப் பட்டிருந்ததால் இதற்கு இணைந்த பெயராக ஜேதவனராமய தூபி என்ற பெயர் வந்ததாகவும் கருதப்படுகின்றது.



சிறப்புக்காரணி


8 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கபட்டிருக்கும் அதன் அமைவு விட்டத்தில் இருந்து நுணிவரை மேல் நோக்கியதாக 430 அடி வரை உயரம் கொண்டதாக இருக்கின்றது.

அன்றைய காலப்பகுதியல் இந்நாட்டில் நிலவிய கட்டடக்கலை நிர்மாணம் மற்றும் அதற்குரிய செங்கற்கள் போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையானது அக்காலத்தில் உயர்நிலையில் காணப்பட்ட தொழில்நுட்பத்தை எடுத்து காட்டுகின்றது.

வரலாற்றுடன் ஒப்பிட்டு நோக்கும் போது இந்த தூபி என்ன காரணத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டது என்பது இன்று வரை புரியாத புதிராகவே காணப்படுகின்றது.

எனினும் சில தூபிகள் புத்தரின் புனித தந்தம்( உடல் பாகங்கள்) வைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்நாட்டில் புத்தரின் புனித தந்தமான உடலபகுதி( எலும்பு கூடு அல்லது அஸ்தி) வைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டதாக குறிப்புக்களும் அடையாளப்படுத்துகின்றன.

அத்தோடு அக்கால முக்கிய நிகழ்வுகள் அல்லது அப்பிரதேசத்திற்குரிய சிறப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு தூபிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இத்தூபிக்கு அண்மையில் இதேபோன்றதொரு பிரமாண்டமான தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும்.

மஹிந்த தேரர் நினைவாக

மஹிந்த தேரரின் இலங்கை விஜயத்தின் போது அவர் இங்கு பரிநிர்வாரணம் (மரணம்) அடைந்தபோது அவரின் உடல் திஸ்ஸ மகாராமவுக்கு கிழக்காக உள்ள இடம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டதாக தீபவம்சத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன.

அதனால் இந்த ஜேதவனராம தூபி மஹிந்த தேரரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்றும் வரலாற்றாசிரியர்கள் ஊகிக்கின்றனர்.

இதுபற்றி மகாவம்சம் குறிப்பிடுகையில் அவரின் உடல் ருவன்வெளிசாயவுக்கு இடப்பக்கமாக அடக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றது.

ஆயினும் இந்த ஜேதவனராம பகுதியில் திருகோண முக்கோண கலாசாரத் திட்டத்தின் கீழ் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது இந்த தூபியின் தெற்காக மூன்று அடி ஆழத்திற்கு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது அங்கு சில எச்சங்களும் நிலக்கரி படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன்மூலம் மஹிந்த தேரரின் உடல் எரிக்கப்பட்ட இடமாக அந்த இடம் இருக்கலாம் என்றும் எவ்வாறாயினும் ஜேதவனராம தூபி அமைந்திருப்பது அநுராதபுரத்தில் மன்னராட்சி நிலவியதும் பௌத்தத்தின் வளர்ச்சி மற்றும் வரலாற்று மூலாதாரங்களாக கருதப்படும் கட்டடங்கள் அழிவுற்று மீதம் உள்ள எச்சங்கள் அமைந்துள்ள பிரதேசத்திலுமாகும். அத்துடன் ஜோதிவனம் என்ற நிலப்பரப்பிலுமாகும் .

இந்தக்காரணத்தால் ஜேதவன என்ற பெயர் வந்திருக்ககூடும் என்று கருதப்படகின்றது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்த தூபி நிர்மாணிக்கப்பட்டிருப்பதோடு மஹிந்த தேரரின் மறைவும் அந்த வருடமே நிகழ்ந்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.



பெருமளவான நிலப்பரப்பில் கட்டடங்கள்

ஜேதவனராம அமைந்துள்ள பகுதியில் மேலும் பல கட்டடங்கள் உள்ளன.

பிக்குமார்கள் தங்கும் விடுதிகள்,தானம் வழங்கும் மண்டபம் வழிபாட்டுத்தளம் போதனை மண்டபம் என்பனவும் அமைந்துள்ளன.

அத்தோடு பக்தர்களுக்கான ஓய்வு மண்டபம் கூட்டம் கூடும் மண்டபம் என்பனவும் தொடர் கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

ஜேதவன தூபிக்கு அண்மையில் உள்ள கட்டடங்கள் 9ஆம், 10ஆம் நிர்மாணிக்கபட்டதாகவும் காணப்படுகின்றது.

4ஆம் நூற்றாண்டில் உரோமப்போர் வீழ்ச்சி கண்ட போது உலகில் உள்ள மிக உயரமான கட்டடமாகவும் தூபியாகவும் இது இருந்தது.

அத்தோடு எகிப்தில் பிரமிட்டுகளுக்கு அடுத்ததாக சிறப்பு இந்த தூபிக்கு இருக்கின்றது. இந்த ஜேதவனராமய தூபியை நிர்மாணிப்பதற்கு 9 கோடி 33 லட்சம் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கணிப்பிடப்பட்டிருக்கின்றன.


ஒன்பதரை கோடி செங்கற்களால் கட்டப்பட்ட இலங்கையின் இரும்புக் கோட்டை! எகிப்திய பிரமிட்டுக்கு இணையான சாதனை! Reviewed by Author on January 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.