அண்மைய செய்திகள்

recent
-

ஜெயாவின் மரணத்தால் போயஸ்கார்டனில் கௌரவிக்கப்பட்ட ஈழத்து கவிஞர்..!


மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் பாடல் எழுதிய ஈழத்து கவிஞர் அஸ்மின் போயஸ்கார்டன் இல்லத்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீர் உடல்நல குறைவுகாரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனையடுத்து, முதலமைச்சரின் மறைவுக்கு இரங்கல் பாடலை ஈழத்து கவிஞர் அஸ்மின் எழுதியிருந்தார். குறித்த பாடல் பலரின் கவனத்தைப் பெற்றுக்கொண்டது.


இந்நிலையில், ஈழத்து கவிஞர் அஸ்மின் போயஸ்கார்டன் இல்லத்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த கருத்து தெரிவித்துள்ள கவிஞர் அஸ்மின்,

நான் எழுதி வர்சன் இசையமைத்து பாடிய ‘வானே இடிந்ததம்மா’ அம்மா இரங்கல் பாடல் உலகம் எங்கும் கவனம் பெற்ற நிலையில் தமிழக மக்களின் மனதிலும் அழியாத காவியமாய் ஆழவேரூன்றியுள்ளது.

தொடர்ந்து 20 நாளுக்கும் மேலாக அம்மாவின் சமாதியில் 24 மணிநேரமும் ‘வானே இடிந்ததம்மா’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் போயஸ்கார்ட்டனில் அமைந்துள்ள அம்மாவின் வேதா இல்லத்துக்கு எம்மை அழைத்த அம்மாவின் நெருங்கிய தோழி சசிகலா நடராஜன் எம்மை பாராட்டினார்.

அம்மா இரங்கல் பாடல் தன்னை வெகுவாக பாதித்ததாகவும் தெரிவித்தார். அம்மாவின் இரங்கல் பாடலை வர்சன் பாடும்போது அவர் கண்கலங்கி ஸ்தம்பித்து போனதையும் காணக்கூடியதாக இருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெயாவின் மரணத்தால் போயஸ்கார்டனில் கௌரவிக்கப்பட்ட ஈழத்து கவிஞர்..! Reviewed by Author on January 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.