அண்மைய செய்திகள்

recent
-

தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மருத்துவ பீட மாணவர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த ஊர்வலமானது இன்றைய தினம் காலை யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஊர்வலம் ஆடியபாதம் வீதி வழியாக பலாலி வீதியை அடைந்து பலாலி வீதி ஊடாக ஆரியகுளம் சந்தியை அடைந்து அங்கிருந்து ஸ்ரான்லி வீதி வழியாக பிரதான வீதியை அடைந்து இதனைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட செயலகம் வரை செல்லவுள்ளது.

மேலும், யாழ்.மாவட்ட செயலரிடமும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடமும் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் Reviewed by NEWMANNAR on January 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.