மன்னார் நாகதாழ்வு சென்- தோமையர் ஆலையத்திற்கான ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கி வைத்த மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்-(படங்கள் இணைப்பு)
மன்னார் நாகதாழ்வு 'சென் தோமையர்' ஆலையத்திற்கான ஒலி பெருக்கி சாதனங்களை வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு குறித்த சாதனங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை(29) மாலை ஆலய நிருவாகிகளிடம் வைபவ ரீதியாக கையளித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் அருட்தந்தை மற்றும் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் முஜாஹிர் ஆகியோர் கலந்து கொண்டார்.
இதன் போது குறித்த ஆலையத்திற்கு தேவையான ஒலி பெருக்கி சாதனங்கள் அடங்கிய தொகுதியினை மாகாண சபை உறுப்பினர் வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.
அமைச்சர் றிஸாட் பதியுதீனின் நேரடி அவதானிப்பின் கீழ் காணப்படும் கிராமங்களில் நாகதாழ்வு கிராமமும் ஒன்றாக காணப்படுகின்றது.
அது மட்டுமல்லாது சென்ற வருடம் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கோவிலின் புனரமைப்புக்காக சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
(29-1-2017)
குறித்த நிகழ்வில் அருட்தந்தை மற்றும் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் முஜாஹிர் ஆகியோர் கலந்து கொண்டார்.
இதன் போது குறித்த ஆலையத்திற்கு தேவையான ஒலி பெருக்கி சாதனங்கள் அடங்கிய தொகுதியினை மாகாண சபை உறுப்பினர் வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.
அமைச்சர் றிஸாட் பதியுதீனின் நேரடி அவதானிப்பின் கீழ் காணப்படும் கிராமங்களில் நாகதாழ்வு கிராமமும் ஒன்றாக காணப்படுகின்றது.
அது மட்டுமல்லாது சென்ற வருடம் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கோவிலின் புனரமைப்புக்காக சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
(29-1-2017)
மன்னார் நாகதாழ்வு சென்- தோமையர் ஆலையத்திற்கான ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கி வைத்த மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்-(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
January 29, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 29, 2017
Rating:

No comments:
Post a Comment