பிள்ளையானின் உத்தரவிற்கமைய கொலை செய்யப்பட்ட பரராஜசிங்கம்! நீதிமன்றில் தகவல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், பிள்ளையானின் உத்தரவுக்கு அமைய கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோசப் பரராஜசிங்கம், முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) உத்தரவிற்கமைய கொலை செய்யப்பட்டதாக சட்டமா அதிபர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பிள்ளையானின் உத்தரவிற்கமைய பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் சாட்சி கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். ஷாந்தன் என்ற நபரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் வெளியிட்ட தகவல்களை நிராகரித்த பிள்ளையான் தரப்பு, தனது மனுதாரருக்கு எதிராக எவ்வித சாட்சியும் இல்லாமல் பயங்கரவாத தடைச்சட்டத்தில் நீண்டகாலமாக தடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொலை தொடர்பில் பிள்ளையானுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு தாக்கல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் உத்தரவிற்கமைய பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் சாட்சி கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். ஷாந்தன் என்ற நபரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் வெளியிட்ட தகவல்களை நிராகரித்த பிள்ளையான் தரப்பு, தனது மனுதாரருக்கு எதிராக எவ்வித சாட்சியும் இல்லாமல் பயங்கரவாத தடைச்சட்டத்தில் நீண்டகாலமாக தடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொலை தொடர்பில் பிள்ளையானுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு தாக்கல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிள்ளையானின் உத்தரவிற்கமைய கொலை செய்யப்பட்ட பரராஜசிங்கம்! நீதிமன்றில் தகவல்
Reviewed by NEWMANNAR
on
January 25, 2017
Rating:

No comments:
Post a Comment