மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று மிகவும் சிறப்பாக இடம் பெற்ற உழவர் விழா....படங்கள் இணைப்பு
வருடாவருடம் கொண்டாடப்படுகின்ற உழவர் விழாவானது இம்முறையும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இன்று 24-01-2017 காலை பத்துமணிக்கு பொங்கல் நிகழ்வு சூரிய வணக்கத்துடன் ஆரம்பமானது. சிறப்பு நிகழ்வாக உழவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வாக பொன்னாடை போர்த்தி அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதுடன் புதிய செயலகத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்ட இடத்தில் மேளதாளவாத்திய இசையுடன் கண்கவரும் நடனங்களும் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் உதவிச்செயலாளர்கள் திட்டமிடல் பணிப்பாளர்கள் அரச அதிகாரிகள் கலாச்சார மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உழவர்பெருமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தொகுப்பு -வை-கஜேந்திரன்-

மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று மிகவும் சிறப்பாக இடம் பெற்ற உழவர் விழா....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
January 24, 2017
Rating:
No comments:
Post a Comment