அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கடற்படைத்தளத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரி சேன -28 நாள் போராடும் தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வில்லை -

மன்னார் முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் விசேட பயிற்சியை பூர்த்தி செய்த கடற்படையினருக்கு இலட்சினை அணிவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் இடம் பெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொண்டு இலட்சினையை அணிவித்தார்.
இலங்கையின் முதலாவது தடவையாக விசேட பயிற்சியை பூர்த்தி செய்த கடற்படையினருக்கே குறித்த இலட்சினை அணிவிக்கப்பட்டது.
இதன் போது பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன கலந்து கொண்டு இலட்சினையை அணிவித்தார்.
இதன் போது பாதுகாப்புத்தரப்பினர்,கடற்படை யினரின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முள்ளிக்குளம் கடற்படை தளம் அமைந்துள்ள காணியானது மக்களின் பூர்வீக குடியேற்ற காணியாக காணப்படுகின்றது.
குறித்த காணிகளின் உரிமையாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் குறித்த காணியை விடுவிக்க கோரி பாதீக்கப்பட்ட மக்கள் பல தடவைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
-எனினும் குறித்த காணியை விடுவிப்பது தொடர்பாக அரசு எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்காத நிலையில் ஜனாதிபதி முள்ளிக்குளம் கடற்படை தளத்திற்கு திடீர் விஜயம் செய்தமை பாதீக்கப்பட்ட மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.















மன்னார் நிருபர்-
(27-2-2017)
மன்னார் கடற்படைத்தளத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரி சேன -28 நாள் போராடும் தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வில்லை - Reviewed by NEWMANNAR on February 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.