மன்னாா் நானாட்டானில் இடம்பெற்ற 3 நூல்களின் வெளியீட்டு விழா..... படங்கள் இணைப்பு
நானாட்டானில் இடம்பெற்ற மூன்று நூல்களின் வெளியீட்டு விழா.
மன்னாா் மாவட்டத்தில் பல்லாண்டுகளாக நடிக்கப்பட்டுவரும் கத்தோலிக்க நாட்டுக்கூத்துக்களின் மூன்று நாடகங்கள் அச்சிடப்பட்டு அவற்றின் வெளியீட்டு விழா நேற்று (26.02.2017) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு நானாட்டான் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இவை வெளியிடப்பட்டன.
1. முருங்கனில் நடிக்கப்பட்டுவரும் புலவா் மாியான் சந்தான், புலவா் மாியாம்பிள்ளை ஆகியோா் எழுதிய சந்தியோகுமையோா் நாடகம்,
2. மன்னாா் மாதோட்டத்தில் பரவலாக நடிக்கப்பட்டுவரும் புலவா் கீா்த்தாம்பிள்ளை எழுதிய என்றிக்கு எம்பரதோா் நாடகம்,
3. கறுக்காக்குளம் பகுதியில் நடிக்கப்பட்டுவரும் புலவா் சமியேல் பிரகாசம் எழுதிய இம்மானுவேல் நாடகம்
ஆகியவையே நூலுருப்பெற்று வெளியிடப்பட்ட நாடகங்களாகும்.
வடமாகாண பிரதம செயலாளா் திரு. அ. பத்திநாதன் அவா்களின் முயற்சியில் இவை வெளியிடப்பட்மை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளா் திரு. இ. இரவீந்திரன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினாா். மன்னாா் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பாிபாலகா் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை முதன்னை விருந்தினராகக் கலந்துகொண்டாா். அறிமுக உரையை திரு. பத்திநாதன் வழங்கினாா். வடமாகாண அமைச்சர் ப.டெனிஸ்வரன்
மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்ரியன் இவர்களுடன் அரச அதிகாரிகள் கலாச்சார உத்தியோகத்தர்கள் மூத்தகலைஞர்கள் கலைஞர்கள் ஆசிரியர்கள் பொதுநிலையினர் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
400 வருட நீண்ட நெடிய பாரம்பாியத்தைக் கொண்ட மன்னாா் மாதோட்ட கத்தோலிக்க கூத்து மரபின் முக்கியத்துவம் பற்றியும் அது தொடா்பான நூல்கள், முக்கிய ஆளுமைகள், ஆய்வாளா்கள் பற்றியும் தெளிவையும் இனிவரும் சந்ததிக்கு ஒரு ஆவணமாகவும் உள்ள இவ்வரிய நூல்களை வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வெளியீடு கண்டது.
மன்னாா் நானாட்டானில் இடம்பெற்ற 3 நூல்களின் வெளியீட்டு விழா..... படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
February 27, 2017
Rating:

No comments:
Post a Comment