வவுனியாவில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாப பலி
வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் காட்டில் வைத்த மின்சாரத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் வைக்கப்பட்ட மின்சாரத்தில் சிக்கி ( சட்டவிரோத மின்சாரம்) தாக்கி தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த விக்கினேஸ்வரன் கிரிதாஸ் 30வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தள்ளார். இடம்பெற்ற இச்சம்பவம் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் சடலத்தினை வவுனியா பொது வைத்தியசாலையில் கொண்டவரப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாப பலி
Reviewed by Author
on
February 01, 2017
Rating:

No comments:
Post a Comment