முல்லைத்தீவில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்புளுவன்சா-A (H1N1) என அழைக்கப்படும் பன்றிக்காய்ச்சல் நோயானது பரவும் அபாயமுள்ளது. தற்போது பத்துக்கும் அதிகமான நோயாளிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். இவற்றில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்களே அதிகம் காணப்படுகின்றனர். தற்போது நாடு முழுவதும் அண்ணளவாக ஆயிரம் நோயாளிகள்வரை சந்தேகிக்கப்பட்டு மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.இது ஒருவரிடமிருந்து சுவாசம் மூலம் காற்றினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும். இந்நோயின் அறிகுறிகளாக, காய்ச்சலுடன் தடிமன், தொண்டை நோ, மூக்கினால் வடிதல், தலைவலி, உடல்சோர்வு, தசை வலி மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் போன்றவையே காணப்படும். இந்நோய்க்கு அதிகம் தொற்றுக்குள்ளாகக் கூடியவர்கள் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், அறுபது வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள்.
சனநெரிசலான இடங்கள், தேவையற்ற பிரயாணங்கள் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் அநாவசியமான தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இந்நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக தகுதியான வைத்தியரை நாடி ஆலோசனை பெறுவது நல்லது.
முல்லை விஜி
முல்லைத்தீவில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்
Reviewed by NEWMANNAR
on
February 16, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 16, 2017
Rating:

No comments:
Post a Comment