வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் குப்பைகள் : ரிஷாட் பதியுதின் திடிர் விஜயம்
வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் திண்ம , திரவ கழிவுகளால் அப்பகுதி மக்கள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.,வவுனியா சாளம்பைக்குளம் (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு ) முன்பாக 100 மீற்றர் தொலைவில் திண்ம மற்றும் திரவக்கழிவுகளை வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபையினரும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதாகவும் சிறுவர்கள் , குழங்தைகள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதின் , வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார , வவுனியா நகரசபை செயலாளர், வவுனியா பிரதேச செயலாளர் , வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் , வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் என பலரும் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்,
தினசரி 50 மேக்றின்தோன் குப்பைகள் கொட்டப்படுவதாவும் இதனை இவ் பிரதேசத்திலிருந்து அகற்றுமாறு பொதுமக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர். அல்லது மக்களுக்கு பாதிப்பற்ற வகையில் புதிய தொழிநூட்ப முறையினை பயன்படுத்தி அகற்றுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன் . அவர்கள்
குப்பைகளை துர்நாற்றம் வீசாமல் , சுற்றுப்புறச்சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி அகற்றுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குறிய நடிவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதின் தெரிவித்தார். இவ் குப்பை மேட்டினை சுற்றி 450க்கு மேற்ப்பட்ட குடும்பத்தினர் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்,
தினசரி 50 மேக்றின்தோன் குப்பைகள் கொட்டப்படுவதாவும் இதனை இவ் பிரதேசத்திலிருந்து அகற்றுமாறு பொதுமக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர். அல்லது மக்களுக்கு பாதிப்பற்ற வகையில் புதிய தொழிநூட்ப முறையினை பயன்படுத்தி அகற்றுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன் . அவர்கள்
குப்பைகளை துர்நாற்றம் வீசாமல் , சுற்றுப்புறச்சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி அகற்றுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குறிய நடிவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதின் தெரிவித்தார். இவ் குப்பை மேட்டினை சுற்றி 450க்கு மேற்ப்பட்ட குடும்பத்தினர் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் குப்பைகள் : ரிஷாட் பதியுதின் திடிர் விஜயம்
Reviewed by NEWMANNAR
on
February 18, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 18, 2017
Rating:

No comments:
Post a Comment