அண்மைய செய்திகள்

recent
-

அரிப்பு கிராமத்தில் சிறப்பாக இடம் பெற்ற மனைப்பொருளியல், அழகியல் காண்காட்சி-(படங்கள்)

  முசலி பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவினால் அரிப்பு மகளிர் நிலையத்தில் கடந்த ஒரு வருட காலம் மனைப் பொருளியல் டிப்ளோமா பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த பயிலுனர்களின் ஆக்கத்திறன்களை காட்சிப்படுத்தும் மனைப்பொருளியல், அழகியல் காண்காட்சி இன்று புதன் கிழமை(22) காலை அரிப்பு றோமன் கத்தோழிக்க பாடசாலையில் இடம் பெற்றது.

முசலி பிரதேசச் செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கண்காட்சி முசலி கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.எஸ்.ஹஸ்மி தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் அரிப்பு செங்கோல் மாதா ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை டெனி கலிஸ்ரஸ் ஆகியோர் இணைந்து மனைப்பொருளியல், அழகியல் காண்காட்சியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

-குறித்த கண்காட்சியில் விருந்தினர்களாக முசலி உதவி பிரதேசச் செயலாளர் விக்கிரமசிங்க,மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ரங்கநாயகி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-குறித்த மனைப்பொருளியல், அழகியல் காண்காட்சி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு பரிசிலிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

-குறித்த கண்காட்சியில் பயிலுனர்களின் ஆக்கத்திறன்களான தையல் வேலை,கை வேலை,பின்னல் வேலை,பெயின்ரிங் வேலை,மலர் ஒழுங்கமைப்பு,கேக் ஐசிங்,சாரி வேலை உற்பட பல்வேறு ஆக்கத்திறன்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















அரிப்பு கிராமத்தில் சிறப்பாக இடம் பெற்ற மனைப்பொருளியல், அழகியல் காண்காட்சி-(படங்கள்) Reviewed by NEWMANNAR on February 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.