அமெரிக்காவில் சமூக விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஜாக்பாட் பரிசுத்தொகை!
சமூக விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு 250,000 டொலர் பரிசுத்தொகையையை அறிவித்துள்ளது அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எம்.ஐ.டி பல்கலைகழகத்தின் சார்பாக, சமூகத்தின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் அதற்கெதிராக செயல்படுவோருக்கு 250,000 டொலர் (இலங்கை மதிப்பில் ரூ.3,80,62,500) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை, போட்டியில் தனி நபருக்கோ அல்லது ஒரு குழுவாக இயங்கி வெற்றிபெறுபவருக்கோ வழங்கப்படும் எனவும் எம்.ஐ.டி அறிவித்துள்ளது.
இதுகுறித்து எம்.ஐ.டியில் பேராசியராக பணிபுரிந்துவரும் சக்கர்மேன் என்பவர் கூறுகையில், “சமுதாயத்தின் பழமைவாய்ந்த கட்டுப்பாடுகளால் மனிதர்களின் சுதந்திரங்கள் ஒடுக்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
பாகிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலரான காலிடா புரோகி என்பவர் ஒரு குழுவாக செயல்பட்டு அந்நாட்டின் கிராமப்புறங்களில் நடைபெறும் ஆணவக்கொலைகளுக்கு எதிராகவும் பெண்களின் கல்வி, சுயமரியாதை உள்ளிட்டவைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
அவரின் அயராத முயற்சியில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குறிப்பிட்டளவு சமூக வளர்ச்சியை அடைந்துள்ளனர். இதுபோன்ற சமூக கட்டுப்பாடுகளை உடைத்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவர்களுக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் உலகளவில் சமூகக்கடுப்பாடுகளுக்கு எதிராக போராடப்பட்டு, மக்களின் உரிமையை நிலைநாட்டிய பல்வேறு போராட்ட வரலாறுகளையும் எடுத்துக்காட்டாக கூறிய அவர், அவ்வாறான முயற்சிகளை ஊக்குவிக்கப்படும் வகையில் இந்த பரித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வரும் யூலை 21 திகதியன்று எம்.ஐ.டி கல்லூரியில் நடைபெறும் ஆண்டு விழாவின்போது வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சமூக விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஜாக்பாட் பரிசுத்தொகை!
Reviewed by Author
on
March 17, 2017
Rating:
Reviewed by Author
on
March 17, 2017
Rating:


No comments:
Post a Comment