மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக 4000 மில்லியன் ரூபாய் செலவு-2016
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரின் தலைமையில் இன்று மாலை 3-00 மணியளவில் இவ்வருடத்தின் முதலாவது கூட்டமாகவும் கடந்த வருடத்தின் அபிவிருத்திப்பணியின் மீளாய்வு செய்வதாகவும் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும்,குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், ஜனாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் பிரபா கணேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், பிரதேச செயலாளர்கள், பொலிஸ், கடற்படை உயர் அதிகாரிகள், திணைக்களத்தலைவர்கள், அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள், விவசாய, மீன்பிடி அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதோடு தீர்வுகளும் முன் வைக்கப்பட்டது.
கடந்த காலங்களிலே மன்னார் மாவட்டத்தில் மண் அகழ்வில் இடம் பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராயப்பட்டதோடு, எதிர்காலத்தில் அவ்வாறு இடம் பெறாத வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பாதை அபிவிருத்திக்கு கிரவல் மண் அகழ்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 4000 மில்லியன் ரூபாய் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டு அனைத்து பணமும் செலவழிக்கப்பட்டுள்ளமை குறித்து தெளிவூட்டப்பட்டது.
பிரதானமாக விவாதிக்கப்பட்ட விடையங்கள் இவைகள் தான்....
- மாந்தை உப்பு உற்பத்தி விலை நிர்னயிக்கப்பட்ட விலை மீனவர்களுக்கு முன்னுரிமை.
புத்தளம் பகுதியில் உள்ள பாடசாலைகள் வடமாகாணத்திற்கு உட்பட்டது
சட்ட விரோதமாக கிரவல் எடுத்தல் குஞ்சுக்குளம் முள்ளிக்குளம் அதோ போன்று அருவியாறு கல்லாறு பகுதிகளில் மணல் அகழ்வு நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிகள் புனரமைப்பதற்கு கிரவல் தடைசெய்யப்பட்டுள்ளதால் அபிவிருத்திப்பணிகள் பாதிப்பு.
சன்னார் பெரியமடு பள்ளமடு பகுதிகளில் குடிநீர் திட்டம் பூரணப்படுத்துவதற்கு நிதிபற்றாக்குறை 38 மில்லியன் ரூபாயை தேவை இதுவரை 23 மில்லியன் ரூபாய் செலவு நிதிகிடைத்தால் மார்ச்- 31 முழுமையாக பூர்த்தியாகும்.
முசலிப்பிரதேசத்தில் மண் அகழ்வு நீதி மன்றத்தால் தடை.
மன்னார் பிரதேச பகுதியில் உள்ள மேட்டுநிலப்பகுதியில் உள்ள மணல் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல தடை கிராமங்களின் வளங்களை பாதுகாக்கும் பொருட்டு கிராம அலுவலர் சமுத்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாயாமைப்புக்கள் WRDA RDA போன்றவை குழுவாகசெயட்படலாம் என அலோசனை முன்வைக்கப்பட்டது.
வனவளம் எல்லைப்படுத்தல் இணைத்தலைவர்கள் பொதுஅமைப்புக்களுடன் இணைந்து கரடிக்குழி முள்ளிக்குளம் 68 ஏக்கர் காணிகளை வனவளம் கெசற்பன்னப்பட்டதாக தெரிவிப்பு 2வாரத்திற்குள் காணிகளை அடையாளப்படுத்டும்படி பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவு மக்களுக்கும் இணைத்தலைவர்களுக்கும் தெரியாமல் G A கெசற்பன்ன வேண்டாம் என முடிவு.
கரையோரப்பகுதி பாப்பாமோட்டை எருக்கலம்பிட்டி போன்றபகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் செய்யமுடியாத நிலை.
வனவளபாதுகாப்பு வனவிலங்கு பாதுகாப்பு கரையோர பாதுகாப்பு அவசியம்.
கட்டுக்கரைக்குளத்தில் 5 அடிக்கு குறைவாக நீர் பாய்வதால் மீன்பிடிப்பு பாதிப்பு
மன்னார் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பேரூந்து நிலையம் COMPLEX சுப்பெர் மார்கெட் இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளல்.
அரசகாணிகள் எதுவாக இருந்தாலும் ஒரு சதுர அடியேனும் யாருக்கும் கொடுக்க இயலாது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
வறுமை குறைப்பு செயற்திட்டம் சமுர்த்தி- 2017
வரட்ச்சி 13499 குடும்பம் பாதிப்பு
குடிநீர் தேவையான குடும்பம் 7675
வீட்டுத்திட்டம் காலதாமதம் இன்றி செயற்படல் வேண்டும்.
வன்னிப்பல்கலைக்கழகம் தொடர்பாக விகிதாசார அடிப்படையில் அமைப்பதற்கான கோரிக்கை கடிதம் மூலம் அனுப்புதல் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்து பேசியமை.
இந்திய ரோலர் வருகை கட்டுப்படுத்தல் அதற்கு கடற்படையினர் முன்வரவேண்டும் என மன்னார் மீனவ சமாசத்தின் தலைவர் வேண்டுகோள் அத்தோடு மீனவர்களுக்கு இருக்கும் பாஸ்முறைப்பிரச்சினையும் முன்வைக்கப்படது
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள், பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு பிரதேசச் செயலாளர்களினூடாக குறித்த பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்திக்கூட்டமானது சும்மா கூடி கலைவதாகவே தென்படுகின்றது அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிப்பது பெரும் சிரமமாகவே உள்ளது அடுத்த முறையேனும் பார்ப்போம்......என்ன செய்யப்போகின்றார்கள் என்று.........
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக 4000 மில்லியன் ரூபாய் செலவு-2016
Reviewed by Author
on
March 03, 2017
Rating:
Reviewed by Author
on
March 03, 2017
Rating:







No comments:
Post a Comment