பல்கலைக்கழக விருப்பத்தெரிவுகளுக்கான முடிவு திகதி அறிவிப்பு..!
பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளின் 2016-2017 கல்வியாண்டுக்கான, பாடவிதானம் மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான விருப்பத் தெரிவுகளுக்கான முடிவுத் திகதி எதிர்வரும் திங்கட்கிழமையுடன் (20.3.2017) நிறைவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா, பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளின் 2016-2017 கல்வியாண்டுக்கான, பாடவிதானம் மற்றும் பல்கலைக்கழகத் தெரிவு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளுக்கு தாம் கற்கவிரும்பும் பாட விடயங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் விருப்பத் தெரிவுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது . இச்சந்தர்ப்பம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் (20.3.2017) பின்னர் மாற்றப்பட முடியாதென அவர் அறிவிடுகுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இம்முறை சுமார் 71 ஆயிரம் மாணவர்கள் 2016-2017 கல்வியாண்டுக்கென விண்ணப்பித்துள்ளதாகவும், குறித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் தற்சமயம் பரிசீலிக்கப்பட்டு வருவதோடு, மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதும், அதனை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி ஒன்று மாணவர்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக விருப்பத்தெரிவுகளுக்கான முடிவு திகதி அறிவிப்பு..!
Reviewed by NEWMANNAR
on
March 18, 2017
Rating:

No comments:
Post a Comment