மன்னார் பஸார் பகுதியூடாக கடலுக்குச் செல்லும் கழிவு நீர் வடிகானை மூடி......வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-PHOTOS
மன்னார் பஸார் பகுதியூடாக கடலுக்குச் செல்லும் கழிவு நீர் வடிகானை மூடி,கழிவு நீர் செல்லாத வகையில் செயற்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு எதிராக மன்னார் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை(16) சட்ட சடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மன்னார் நகர சபை செயலாளர் தெரிவித்தார்.
-மன்னார் நகர சபையினால் கடந்த 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைவாக சிரமதானம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை மன்னார் நகர சபை முன்னெடுத்துள்ளது.
-இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (16) கடலேரி வீதி-பெரியகடை-பனங்கட்டு கொட்டு கிழக்கு போன்ற பகுதிகளில் மன்னார் நகர சபை பணியாளர்களினால் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
-இதன் போது மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக உள்ள கழிவு நீர் வடிகான்களின் இருந்து பாரிய துர் நாற்றம் வீசி வந்த நிலையில் மன்னார் நகர சபை பணியாளர்கள் வடிகானை சோதனையிட்டனர்.
-இதன் போது கழிவு நீர் வாய்க்காலினூடாக கடலுக்கு செல்ல முடியாத நிலையில் மண் மற்றும் கற்கலினால் தடை பட்டிருந்தமை தெரிய வந்தது.
-இந்த நிலையில் மன்னார் நகர சபை பணியாளர்களுடன் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட நிலையில் கழிவு நீர் கடலுக்குச் செல்ல முடியாத வகையில் வடிகானில் தடங்களை ஏற்படுத்திய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்றகொள்ள பொலிஸார் நடவடிக்கைகளை முன் னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
மன்னார் பஸார் பகுதியூடாக கடலுக்குச் செல்லும் கழிவு நீர் வடிகானை மூடி......வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-PHOTOS
Reviewed by Author
on
March 18, 2017
Rating:
No comments:
Post a Comment