கேப்பாப்புலவில் ஏழு தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகளை அழித்துள்ளது இராணுவம்
கேப்பாப்புலவு கிராமத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் வீடுகள் பலவற்றை அழித்துள்ள படையினர் பூர்வீகக்காணிகளை அடையாளம் தெரியாதவாறு மாற்றியுள்ளனர்.
முல்லைத்தீவுவில் பொதுமக்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளில் பாடசாலை, இந்து ஆலயம், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம், பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் உள்ளடங்கலாக நான்கு வரையான குக்கிராமங்களையும் கொண்டு கேப்பாப்புலவு பகுதி காணப்படுகின்றது.
இந்த பிரதேசத்தை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இன்று வரை படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர்.
இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வற்றாப்ளைப்பகுதியில் உள்ள சீனியாமோட்டை என்ற இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக வாழ்வாதார தொழில் இன்றியும் பல்வேறு நெருக்குதலுக்கு முகங்கொடுத்தும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏழு தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்த குறித்த தங்களது பூர்வீக கிராமத்தை விடுவிக்கக்கோரி கடந்த 14 நாட்களாக கிராமத்தில் முன்பக்கத்தில் அமைந்துள்ள படைமுகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள குறித்த கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான வீடுகள் பல அழிக்கப்பட்டுள்ளதுடன் காணிகளை அடையாளங்காண முடியாதவாறு சின்னாபின்னமாக்கியுள்ளனர்.
இதேவேளை பௌத்த விகாரை, இராணுவ விளையாட்டுத்திடல் மற்றும் படை காவலரண்கள் என்பவற்றை அமைத்துள்ளனர்.
கேப்பாப்புலவுக் கிராமத்தை அடையாளம் காண முடியாதவாறு காணப்படுகின்றது. இதேவேளை இராணுவ கட்டுப்பாட்டிற்குள் பொதுமக்களுக்குச் சொந்தமான பெருமளவான கால்நடைகளும் காணப்படுகின்றன.
இதேவேளை குறித்த கிராமத்தில் எல்லையோரத்தில் காணப்படுகின்ற வனங்களை மீள் உருவாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பட்ட பெறுமதியான தேக்குமரங்கள் பல அழிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 Reviewed by NEWMANNAR
        on 
        
March 14, 2017
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 14, 2017
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
March 14, 2017
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 14, 2017
 
        Rating: 

.jpg) 
 
.jpg) 
 
No comments:
Post a Comment