அண்மைய செய்திகள்

recent
-

வடகிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தனியான அமைச்சைக்கோரும் வியாளேந்திரன் எம்.பி

நல்லாட்சி அரசு மேல்மாகாணம், வடமேல் மாகாணத்துக்கென தனியான மாகாண அவிபிருத்தி அமைச்சை உருவாக்கியது போன்று வடகிழக்கு மாகாணத்துக்கு ஒரு தனியான அபிவிருத்தி அமைச்சரை உருவாக்கி அபிவிருத்தியை மேற்கொள்ளவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் மட்டக்களப்பு ஏறாவூர் மணி மண்டபத்தில் இடம்பெற்ற விடியல் சம்மேளனத்தின் தலைவர் யோகேஸ் மகாதேவன் தலைமையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை யுத்தத்தின் வடுக்களை சுமந்து கொண்டுதான் இருக்கின்றது.

கொழும்பு மாவட்டத்தில் வறுமை 1.08 வீதமாகவுள்ளது. ஆனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு போன்ற வடகிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களில் 20 தொடக்கம் 30 வீதம் வறுமையின் வீதம் அதிகரித்துச் செல்கின்றது.

வறுமை மிக மிக குறைவாகவுள்ள கொழும்பு மாவட்டம் மேல் மாகாணத்திலுள்ளது. அவ்வாறான நிலையில் மேல் மாகாண அபிவிருத்திக்கென ஒரு தனி அமைச்சை உருவாக்கி அபிவிருத்தியை மேற்கொள்கின்றார்கள்.

யுத்தத்தை நேரடியாக சந்திக்காத மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக பாட்டாலி சம்பிக்க ரணவக்க வேலைதிட்டங்களை செய்துகொண்டு வருகின்றார். அதுபோல் வடமேல் மாகாண அபிவிருத்திக்கென அமைச்சரை நியமித்திருக்கின்றார்கள்.

யுத்தத்தை நேரடியாக சந்தித்து தற்பொழுதுவரை யுத்தத்தின் வடுக்களை சுமந்து கொண்டிருக்கின்ற வடகிழக்கு மாகாணத்துக்கு அபிவிருத்தி அமைச்சர் உருவாக்கப்பட வில்லை உருவாக்கப்பட வேண்டும்.

யுத்தத்தை நேரடியாக சந்தித்த வடக்கு,கிழக்கு மாகாணத்தை புறம்தள்ளிவிட்டு, வறுமையில் மிக மிக குறைந்த மாகாணம் யுத்தத்தை நேரடியாக சந்திக்காமல் இழப்புக்கள் எதுவும் சந்திக்காகத மாகாணங்களுக்கு தற்பொழுது நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சியாளர்கள் அபிவிருத்தி அமைச்சர்களை உருவாக்கி அபிவிருத்தி செய்து வருகின்ற நிலையில், வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு அபிவிருத்தி அமைச்சாரை இதுவரைக்கு நியமிக்காதது எந்தவித்தில் நியாயம்.

வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்பது கடந்த காலங்களில் இருந்து புறக்கணிக்கப்பட்டும், பாராமுகமாகவே இருந்து வருகின்றது. ஆகவே ஜனாதிபதி உட்பட பிரதமர் ஆகியோர் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்குரிய அபிவிருத்தி அமைச்சர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக உணர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்காக ஒரு தனி அமைச்சு உருவாக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாவிடின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அபிவிருத்திக்கென அதிகளவான நிதிகளை ஒதுக்கி கூடிய வேலைத் திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

யுத்தத்தினால் பாதிப்படைந்த மாற்றுத் திறனாளிகள், இளம் விதவைப் பெண்கள் உட்பட, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதார திட்டம் போன்ற பல விடயங்களை கருத்தில் கொண்டு பல அபிவிருத்தி செய்யபட வேண்டியுள்ளதால்தான் வடக்கு கிழக்கு மாகாணத்துக்கென தனியானதொரு அபிவிருத்தி அமைச்சரை நல்லாட்சி அரசிடம் கோருகின்றோம் என தெரிவித்தார்.

இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன், கலாநிதி டாக்டர்.என்.குமரகுருபரன் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வடகிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தனியான அமைச்சைக்கோரும் வியாளேந்திரன் எம்.பி Reviewed by NEWMANNAR on March 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.