மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 'மாதிரி கிராம' வீட்டுத்திட்டத்திற்கான முதல் கட்ட கொடுப்பனவு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்-Photos
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சாபையினால் அமைக்கப்படவுள்ள மாதிரி கிராம வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ள போதும் குறித்த வீட்டுத்திட்ட பணியை முன்னெடுக்க மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இது வரை பயனாளிகளுக்கு நிதி வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பிரச்சினை தொடர்பாக முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 27 பயணாளிகளும் இன்று புதன் கிழமை தமது பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் நேரடியாக சென்று மகஜர் ஒன்றை வழங்கி வைத்துள்ளனர்.
அதன் பிரதிகளை மன்னார் பிரதேசச் செயலாளர் மற்றும் மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசாபையின் முகாமையாளர் ஆகியோருக்கும் வழங்கி வைத்துள்ளனர்.
தமது பிரச்சினை குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் 87 வீடுகளை உள்ளடக்கி மாதிரி கிராம வீட்டுத்திட்டம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் முதற்கட்டமாக 27 வீடுகள் அமைக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
-தலா 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையிலே குறித்த வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முதல் கட்டமாக அத்திவாரம் அமைத்தவுடன் முதல் கட்ட கொடுப்பணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பயணாளிகளாகிய நாங்கள் ஏற்கனவே வாழ்ந்து வந்த தற்காலிக வீடுகளை அகற்றி , வட்டிக்கு பணத்தை பெற்று அத்திவாரத்தை அமைத்து சுமார் 2 இலட்சம் ரூபாய் வரை செலவு செய்து கட்டுமானப்பணிகள் ஆரம்பித்துள்ளோம்.
-எனினும் முதற்கட்ட கொடுப்பணவும் வழங்கப்படவில்லை.
முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 27 பயணாளிகளும் இவ்வாறே தமது தற்காலிக வீடுகளை அகற்றி பணத்தை வட்டிக்கு பெற்று ஆரம்ப கட்டமாக அத்திவாரத்தை அமைத்துள்ளனர்.
-சுமார் 2 மாதங்களை கடந்துள்ள நிலையில் இது வரை வழங்கப்பட வேண்டிய முதற்கட்ட கொடுப்பணவான ஒரு இலட்சம் ரூபாய் இது வரை வழங்கப்படவில்லை.
-சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் வரை பணத்தை வட்டிக்கு பெற்று மாதம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி வருகின்றோம்.
-தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற போதும்,அதிகாரிகள் யாரும் தமது பிரச்சினை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையிலே குறித்த பிரச்சினை தொடர்பாக முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 27 பயணாளிகளும் இன்று புதன் கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் நேரடியாக சென்று மகஜர் ஒன்றை வழங்கி
வைத்துள்ளதோடு,மன்னார் பிரதேசச் செயலாளர் மற்றும் மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் ஆகியோருக்கும் மகஜரை வழங்கி வைத்துள்ளோம்.
-எனவே உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டுத்திட்டத்திற்கான கொடுப்பணவுகளை உடன் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.என அந்த மக்கள் மேலும் தெரிவித்தனர்.
மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 'மாதிரி கிராம' வீட்டுத்திட்டத்திற்கான முதல் கட்ட கொடுப்பனவு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்-Photos
Reviewed by NEWMANNAR
on
March 01, 2017
Rating:
No comments:
Post a Comment