மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் விடத்தல் தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றி
2017 ம் ஆண்டிற்கான மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே அடம்பன் மைதானத்தில் நடந்து முடிந்த உதைபந்தாட்ட போட்டிகளில் ஐக்கிய விளையாட்டுக்கழகம் விடத்தல் தீவு சம்பியனாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .
நேற்றய தினம் 11-03-2017 சனிக்கிழமை ஆரம்பமான போட்டிகளில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் கத்தான்குளம் சென்.ஜோசப் அணியை தண்ட உதை மூலம் 04:01 என்ற கோல் அடிப்படையிலும் ,வேட்டையாமுறிப்பு அணியை 04:0 என்ற கோல் அடிப்படையிலும் , ஈச்சளவைக்கை அணியை அரை இறுதியில் எதிர்கொண்டு 05:01 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டு இறுதிபோட்டிக்கு தெரிவாகியது .
இன்றைய தினம் 12-03- 2017 ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டியில் இலுப்பைக்கடவை ,அந்தோணியார் புர அணியை எதிர் கொண்டு 02:01 என்ற கோல் அடிப்படையில் வென்று இவ் நடப்பாண்டு உதைபந்தாட்ட கிண்ணத்தை சுவீகரித்துள்ளது .
வீரர்கள் ,நிர்வாகத்தினர் ,கிராம மக்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள் .
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் விடத்தல் தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றி
Reviewed by NEWMANNAR
on
March 12, 2017
Rating:

No comments:
Post a Comment