ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு மகாராணியும் ஒப்புதல்....
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
எனவே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரெக்ஸிட் மசோதா மீதான அடுத்த நிலையை அடைய தெரசா மேக்கு சட்டரீதியாக முழு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர்.
இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார்.
புதிய பிரதமராக தெரசா மே தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதற்கிடையே, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு ஒப்புதல் பெறுவதற்கான சட்ட மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.
இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக 335 எம்.பி.க்களும், ஆதரவாக 287 எம்.பி.க்களும் வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், மக்களின் கருத்துப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் மசோதாவுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் கடந்த 14ம் தேதி ஒப்புதல் அளித்தது.
அதனைத்தொடர்ந்து, இந்த மசோதா இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ஒப்புதலை பெற அனுப்பி வைக்கப்பட்டது. ராணி எலிசபத் இந்த மசோதாவுக்கு கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து, பிரெக்ஸிட் மசோதா சட்ட வடிவம் பெற உள்ளது.
இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகையில் தர வேண்டிய அல்லது பெற வேண்டிய வர்த்தகம் சார்ந்த இழப்பீட்டு தொகை, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்கள் மற்றும் பிரிட்டனில் வாழ்ந்துவரும் ஐரோப்பிய யூனியன் நாட்டினரின் இரட்டை குடியுரிமையின் நிலைப்பாடு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற தலைவருடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பேச்சுவார்த்தையின் மூலம் உறுதி செய்வார் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு மகாராணியும் ஒப்புதல்....
Reviewed by Author
on
March 17, 2017
Rating:
Reviewed by Author
on
March 17, 2017
Rating:


No comments:
Post a Comment