இரசாயன பயன்பாட்டை தடுக்க ஐ.நா தீர்மானம்! வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த ரஷ்யா திட்டம்
கடந்த ஆண்டு சிரியாவில் அலெப்போ நகரை கைப்பற்றும் நோக்கில் நடைபெற்ற போரின் நடத்தை குறித்து முடிவுகளை தெரிவித்துள்ள ஐ.நா., அந்நாட்டின் விமான படைகள் ரசாயன ஆயுதங்களை கொண்டு போர் குற்றங்களை இழைத்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அரசுப்படைகள் ஐ.நாவின் வாகன தொடரணி மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாகவும், அதில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால், சர்வதேச விதிகளை ரஷ்ய படையினர் மீறியுள்ளார்கள் என்பதை முடிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிரியாவுக்கு ஏனைய மேற்குலக நாடுகள் ஹெலிகொப்டர்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கக் கூடாது எனத் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு ஐ.நா சபை முடிவு செய்துள்ளது. இதற்கான வாக்கெடுப்பொன்றையும் நடத்த உத்தேசித்துள்ளது.
இதனால் ரஷ்யா குறித்த வாக்கெடுப்பை தனது வீட்டோ அதிகாரம் மூலம் நிராகரிக்க முடிவு செய்துள்ளது.
சிரிய யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் இரசாயன தாக்குதல்கள் மற்றும் நவீன ஆயுத தாக்குதல்களால் அதிகளவான பொது மக்கள் இறப்பதாக கூறி, அந்நாட்டிற்கு வேறு நாடுகளிலிருந்து செல்லும் ஆயத்தங்களை தடை செய்வதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உத்தேசித்துள்ளது. நிலையில், குறித்த குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரமில்லை எனத் தெரிவித்து ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவுள்ளது.
மேலும் சிரிய யுத்தத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா,ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தைகளில் எவ்வித சமாதான புரிந்துணர்வுகளும் ஏற்படவில்லை.
குறித்த போரில் சிரிய படைகள் நச்சு வாயுக்களை பயன்படுத்தி பொது மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ஐநா எழுப்பிய குற்றாச்சாட்டுகளில், போதிய ஆதாரங்கள் இல்லை என ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையேயும் மற்றும் ஐஸ் தீவிரவாத அமைப்பினரினால் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்றுவரும் போரினால், இதுவரை சுமார் 3.2 இலட்சம் பேர் கொல்லப்பட்ட்டுள்ளதோடு, சுமார் 8 இலட்சம் பேர்வரை இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரசாயன பயன்பாட்டை தடுக்க ஐ.நா தீர்மானம்! வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த ரஷ்யா திட்டம்
Reviewed by Author
on
March 02, 2017
Rating:

No comments:
Post a Comment