அல் ஹூசெய்ன் மீது சிங்கள அமைப்பு குற்றச்சாட்டு! ஐநா சபையில் முறைப்பாடு....
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அல் ஹூசெய்ன் இலங்கை தொடர்பில் பின்பற்றிய அணுகுமுறை பக்கச்சார்பானது எனவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக ஸ்ரீலங்கா பேரவை என்ற இலங்கை சிங்களப் புலம்பெயர் அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அல் ஹூசெய்னின் இலங்கை குறித்த அணுகுமுறைகள் தொடர்பில் விசாரணை நடத்த விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானங்களை அமுல்படுத்துவதனை இடைநிறுத்துமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.
மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கு எதிராக செய்யப்பட்ட முதல் முறைப்பாடு இதுவென குறித்த கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த முறைப்பாட்டின் பிரதிகள் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் மற்றும் ஏனைய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அந்த அமைப்பிற்கு கிடைத்துள்ள வரப்பிரசாதங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அல் ஹூசெய்ன் மீது சிங்கள அமைப்பு குற்றச்சாட்டு! ஐநா சபையில் முறைப்பாடு....
Reviewed by Author
on
March 22, 2017
Rating:
Reviewed by Author
on
March 22, 2017
Rating:


No comments:
Post a Comment