அண்மைய செய்திகள்

recent
-

எகிப்து தேவாலயத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிகுண்டு: 21 பேர் உடல் சிதறி பலி


எகிப்தில் உள்ள புகழ்பெற்ற தேவாலயத்தின் வாசலில் வெடித்த வெடிகுண்டில் 21 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காயம் அடைந்துள்ளனர்.

எகிப்த்தின் தலைநகரான வடக்கு Cairo பகுதியில் உள்ள உலக புகழ்பெற்ற St George Coptic தேவாலயத்தில் இன்று பெருமளவு மக்கள் கூடியிருந்தனர்.

பலர் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவாலயத்தின் வாசலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் அந்த இடத்தை சுற்றியிருந்த 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 38 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இன்னும் எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.


அந்த பகுதி முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எகிப்தில் 10 சதவீதம் அளவு கிறிஸ்துவர்கள் உள்ளார்கள். இவர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த வருடம் எகிப்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


எகிப்து தேவாலயத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிகுண்டு: 21 பேர் உடல் சிதறி பலி Reviewed by Author on April 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.