சிரியாவில் விஷவாயு தாக்குதல்: சிறுவர்கள் உள்ளிட்ட 58 பேர் பலி....
சிரியாவில் அரசு தரப்பு ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட விஷ வாயு வான்வெளி தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் 58 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து சிரிய விமானப்படையினரின் போர் விமானங்கள் நடத்திய வான்வெளி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 58 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது.
ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது என்ன வகையான ரசாயனம் என்பதை இன்னும் கண்டறியவில்லை என்றும் பிரித்தானியாவை மையமாக கொண்டு செயல்படும் அந்த கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகொப்டர் மூலம் வீசியதாக ஐ.நா. சபை அமைப்பு தனது விசாரணையில் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் விஷவாயு தாக்குதல்: சிறுவர்கள் உள்ளிட்ட 58 பேர் பலி....
Reviewed by Author
on
April 05, 2017
Rating:
Reviewed by Author
on
April 05, 2017
Rating:


No comments:
Post a Comment