அடம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் மன்னாரைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் பலி. (படங்கள் )
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் நேற்று சனிக்கிழமை (15) இரவு இடம் பெற்ற விபத்தில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் கடமையாற்றுகின்ற தொழில்நுட்ப உத்தியோகஸ்தரான துரைரெட்னம் றெட்னகுமார்(வயது-32) எனும் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்
மன்னார் உப்புக்குளம் பகுதியில் வசித்து வரும் ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் நேற்று சனிக்கிழமை
(15) இரவு அடம்பன் பகுதியில் இருந்து மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த இளம் குடும்பஸ்தரான தொழில் நுற்ப உத்தியோகஸ்தர் நேற்று சனிக்கிழமை இரவு (15) அடம்பன் பகுதியில் இருந்து மன்னாரில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போதே அடம்பன் பகுதியில் மரம் ஒன்றுடன் மோதி குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
எனினும் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை அப்பகுதியால் சென்றவர்களினால் அடையாளம் காணப்பட்டு அடம்பன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட பதில் நீதவான் சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை அடம்பன் பகுதியில் சக நண்பர்களுடன் புது வருடத்தை கொண்டாடி விட்டு மன்னார் நோக்கி சக நண்பர்களுடன் வந்த போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

Reviewed by NEWMANNAR
on
April 16, 2017
Rating:

No comments:
Post a Comment