இலங்கை அணி வீரரின் சாதனையை தொட்டுப் பார்த்த நரைன்: பவுண்டரியில் புது சாதனை...
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், கொல்கத்தா அணியின் சுனில் நரைன் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயசூர்யா பவுண்டரியில் அடித்த சாதனையை தற்போது சமன் செய்துள்ளார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடைந்துள்ளது. கொல்கத்தா அணிக்கு தற்போது துவக்க வீரராக மேற்கிந்திய தீவு அணியைச் சேர்ந்தவரும், சுழற்பந்து வீச்சாளருமான சுனில்நரைன் களமிறங்குகிறார்.
இதனால் நேற்றைய போட்டியில்,முதல் ஆறு ஓவர்களுக்குள் முடிந்த அளவு ஓட்டங்கள் சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கிய நரைன், ஒரு ஓட்டங்கள் ஓடி கூட நேரத்தை வீணடிக்கவில்லை.
சுமார் 17 பந்துகளை சந்தித்த நரைன், 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ஓட்டங்கள் விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் பவுண்டரிகள் மூலம் அதிகரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமை பெற்றார்.
இதற்கு முன் கடந்த 2008ல் நடந்த ஐபிஎல் தொடரில் இலங்கையின் ஜெயசூர்யா டெக்கான் அணிக்கு எதிராக 36 ஓட்டங்கள் பவுண்டரிகள் மூலம் சேர்த்திருந்தார்.
தற்போது அந்த சாதனையை நரைன் 9 பவுண்டரிகள் அடித்து சமன் செய்தார்.
இலங்கை அணி வீரரின் சாதனையை தொட்டுப் பார்த்த நரைன்: பவுண்டரியில் புது சாதனை...
Reviewed by Author
on
April 22, 2017
Rating:

No comments:
Post a Comment