மன்னாரில் பனைமரங்கள் பெருமளவில் அழிப்பு பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு….சிறப்புக்கட்டுரை-வை.கஜேந்திரன்
மன்னார் மண்ணில் சுமார் பனைமரங்கள் 35இலட்சம்.தென்னை மரங்கள் 25இலட்சம் மற்ற எல்லா மரங்களைச்சேர்த்து ஒரு கோடிக்கு மேல் இருந்துள்ளது என முன்னாள் மூத்தகலைஞர்களின் வாய் மூலமான சான்றுகள் உள்ளபோதும் தற்போதைய சு10ழ்நிலையில் அவை அனைத்தும் எங்கே…….
மன்னார் மண்ணிற்கு நான் 1998 காலப்பகுதியில் வந்த போது மன்னார் மண்ணில் இருந்த பனைமரங்கள் தற்போது காணமுடியவில்லை குறிப்பாக தரவன்கோட்டை தோட்டக்காடு பேசாலை தலைமன்னார் பட்டித்தோட்டம் தாழ்புபாடு கீரி பிரதேசங்களில் மிகவும் அதிகமாக இருந்த பனைமரங்கள் அதாவது பாதையில் இருந்து பார்த்தால் இருட்டுமயமாகவே பட்டப்பகலில் இருக்கும் தற்போது இந்த பிரதேசங்களில் போய் பாருங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் நிற்கின்றது.
இந்த பாரிய அழிவிற்கு காரணம் என்ன மன்னார் மக்களினதும் அதிகாரிகளினதும் அசமந்தப்போக்கும் விழிப்புனர்வு இன்மையே காரணம்….
வடக்கு கிழக்கில் பனைமரம் அழிவதற்கு பிரதானமான காரணமாக யுத்தம் இருந்துள்ளது. யுத்தத்தின் செல்லடிகளில் தலையின்றி ஏராளமான பனைமரங்கள் அழிந்ததோடு பாதுகாப்பு அரண் அமைப்பதற்காக இராணுவத்தினரால் ஏராளமான பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன அவ்வாறே மன்னார் மண்ணில் இப்போதும் ஏராளமான பனைமரங்கள் வெட்டிசாய்க்கப்படுகின்றன.
அதற்கான காரணங்களைப்பாருங்கள்…
காணியில் தேவையில்லாமல் நிற்கும் பனைமரங்கள்
காணியில் நிற்கும் பனைமரங்களின் பெறுமதி அதிகமாக இருத்தலும் காணியின் விலை குறைவாக இருத்தலும் குறைவான காணியினை வேண்டி பனைமரத்தினை விற்று நிறைய பணம் சம்பாதித்தல்
இரண்டு அல்லது ஐந்து பனைமரம் தறிப்பதற்கான அனுமதியினை வைத்துக்கொண்டு எல்லா பனைகளையும் தறித்தல்.
வேண்டுமென்றே பனைமரத்தின் அடியில் குப்பைகளை கொழுத்தி பட்டுப்போன பனைமரமாக காட்டுதல்
நன்கு வளர்ந்த பனை வட்டுக்குள் பெற்றோல் மண்ணெண்ணை போன்ற திரவங்களை ஊற்றி படவைத்தல்
காணியில் இடைஞ்சலாக இருக்கின்றது என தறித்தல்
இன்னும் ஏராளமான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றது.
பனைமரங்கள் அழிப்பதால் ஏற்படப்போகும் பேராபத்து
சும்மாவே அதிக வெப்பமான மாவட்டமான எமது மன்னார் இன்னும் அதிகமான வெப்பத்தினால் வளம் குன்றப்போகின்றது.
பாரிய மண்ணரிப்பு ஏற்பட்டு கடல் உள்வாங்கி குடியிருப்புக்கள் நாசமாகப்போகின்றது.
கடல் உள்வாங்கப்படுவதால் விளை நிலங்கள் எல்லாம் உவர்நிலமாய் மாறி பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்படும்
பனையினை வாழ்வாதாராமாக கொண்டு வாழ்கின்ற குடும்பங்களின் நிலை எண்ணிப்பாருங்கள்.
- பனங்கள் சீவுதொழில் புரிவோர் நிலை....???
- பனையில் இருந்து பெறப்படும் கைப்பணியில் ஈடுபடுவோர் நிலை,,,???
- பனை உற்பத்திப்பொருட்களில் ஈடுபடும் குடும்பங்களின் நிலை...???
- இயற்கையான வளம் இல்லாமல் அழிக்கப்படும்.
மேற்கூறிய விடையங்களை கடந்த வருடம் 11-11-2016 கண்டி வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி அதிகார சபைக்காரியாலய பிரதம முகாமையாளர் திரு.எம்.பி.லோகநாதன் ஐயா
அவர்களிடம் முறை பாட்டினை முன்வைத்தேன் முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்டதோடு என்ன செய்யலாம் என்றும் வினாவினார்..???
பனைமரக்கணக்கெடுப்பு எடுக்கவேண்டும.
பனைமரம் தறிப்பதற்கான அனுமதியினை இரத்து செய்தல்.
மிகவும் அரிதான பனைமரங்களை அடையாளப்படுத்துதல்.
(கிளைகள் உள்ள பனைமரம் இன்னும் பல)
பனைமரத்திற்கு பதிலாக வேறுமரத்தினை பயன்படுத்தல்(வீட்டுத்திட்டத்திற்கு கம்பஸ் மரங்கள் போன்று)
பனையினால் பெறும் நன்மைகளை மக்கள் முழுமையாக அறியாமை விழிப்புனர்வின்மை. இன்னும் திட்டமிட்டு பல அபிவிருத்தி செயற்பாடுகளை செய்யாவிட்டால்
வடமாகாணத்தின் கொடியில் அடையாளச்சின்னாமாய் மட்டும் தான் பனை இருக்கும் அடுத்த தலைமுறைக்கு படத்தில் தான் பனையினை காட்டவேண்டியிருக்கும் அத்தோடு பனை அபிவிருத்திச்சபை என்ற பகுதியே இருக்காது அதற்கு முன் சிந்தித்து செயற்படவேண்டும். அவசரமாக மன்னார் மண்ணில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்கின்றேன் என்றார்.
அவ்வாறே கலந்துரையாடலும் மன்னார் கச்சேரியில் இடம் பெற்றது ஆனால் எந்தவிதமான முடிவகளும் எட்டப்படவில்லை…
எங்களது வளம் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கின்றது இன்னும் பொறுப்பான அதிகாரிகள் சும்மா காலத்தினையும் நேரத்தினையும் வீணடித்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள். இவர்கள் விழிப்பது எப்போது எமது பாரம்பரிய வளங்கள் அழிவில் இருந்து பாதுகாப்பது எப்போது…..
பனையில் இருந்து விலக்கப்படாத பொருள் என்று எதுவுமே இல்லை எல்லாமே பயன்பாட்டுக்கு உரியவைதான் எங்கள் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த காலங்களில் பனை அவர்களின் மூத்த பிள்ளையாகவும் அதில் இருந்து பெறும் பொருட்களை பெறுமதியானவையாகவே கருதினார்கள.ஆனால் இன்று பனைவளத்தினை பாதுகாப்பது என்பதே...! அரிதாகியுள்ளது. பனைவளத்தினை பேணிபாதுகாக்கவேண்டியவர்களே பனைகளை தறிக்முனைவதால் காலப்போக்கில் எமது பாரம்பரிய பனைவளத்தினை இழக்கப்போகின்றோம் இழந்துவருகின்றோம்.
பனையில் ஆண் பணை பெண் பனை இருவகையுண்டு விரும்பியதை தரும் மரம் என்ற பொருள்தர கற்பகதரு என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்ற பனைமரத்தில் இருந்து பெறப்படுகின்ற ஒவ்வொரு பொருளும் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடியவையே
இலங்கையிலும் இந்தியாவிலும் காணப்படும் பனைமர இனம்
(Borassus Sundaica) என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படகின்றது.
காவோலை-குருத்தோலை-பனையோலை-பனைமட்டை பனஞ்சாறு பன்னாடை பனை ஈர்க்கு பனஞ்சிராய் வெல்லம் பனங்கற்கண்டு சக்கரை நுங்கு பனம்பழம் பனாட்டு பனம்விதை பனங்கிழங்கு புழுக்கொடியல் பனங்கள் பனஞ்சாராயம் பெற்றுக்கொள்ளுகின்றோம்.
பனைமரங்கள் பெரும்பாலும் உலர்வலையங்களில் செழித்து வளர்ந்து பயன்தருகின்றன கற்பகதருவை உற்பத்தி செய்ய உழைப்போ… மிகுந்த செலவோ… தேவைப்படாது. பனம் விதையை சுமார் நாற்பது சென்ரிமீற்றர் ஆழத்தில் புதைத்துவிட்டால் அது தானகவே முளைத்து வளரும் வேலியடைத்து காவல் காக்கவோ… பசளையிடவோ… தேவையில்லை பெரும்பாலும் 100 வீதமான பனம்விதைகள் முளைக்கின்றன.
பனையில் இருந்து நாம் பெறும் பயன்கள் விரிவாக…….
பனம்தும்பு உற்பத்திகள்
தரை விரிப்பு
பாய்
கம்பளம்
தும்புத்தடிகள்
கடுமையான தும்பு-நீண்டகால பாவனைக்கான தூரிகைகள்
நடுத்தர தும்பு-வீட்டுப்பாவனைக்கு சுத்தப்படுத்தலுக்கான தூரிகைகள்
மெல்லிய தும்பு
பூச்சாடிகள்
மற்றும் தும்பிலான கைவினைப்பொருட்கள்
பனையோலை உற்பத்திகள்
பாரம்பரியமாக வேயப்பட்ட கூரைகள்
வேயப்பட்ட கதிரைகள்
கஐ{ அடைப்பதற்கான பெட்டிகள்
தேயிலைச்சுவையூட்டிகள்
தொப்பிகள்
மேசை விரிப்புகள்
சுளகுகள்
பொருட்கள் கொள்வனவுக்கான கூடைகள்
வடிவமைக்கப்பட்ட பைகள்
கைப்பைகள்
விற்பனைக்கு பொதி செய்யும் பெட்டிகள்
முடிச்சு நீத்துப்பெட்டிகள்
அர்ச்சனைக்கூடைகள்
இடியப்பத்தட்டுக்கள்
வேயப்பட்ட மாலைகள்
ஈர்க்கிலானா உற்பத்திகள்
ஈர்க்கிலானா தும்புத்தடிகள்
பற்குற்றிகள் குற்றிவகைகள்
அழகு சாதனப்பொருட்கள்
பூக்கொத்துக்கள்
பூக்கூடைகள்
பனையிலான விளையாட்டுப்பொருட்கள்
சுவரில் தொங்க வைக்கும் பொருட்கள்
பிரம்புகள்
தாவரங்களுக்கான பசளைகள்
மண்ணரிப்பு தடுப்பான்கள்
இன்னும் ஏராளமான பொருட்கள் உள்ளது.
பனங்களி
பனங்களியானாது பனம் பழத்தின் சாற்றிலிருந்து பெறப்படுகின்றது. இப்பனங்களியில் இருந்து ஜாம் கோடியல் சோஸ் மதுசாரம் அற்ற பானங்கள் பனாட்டு (உலரவைத்த பனங்களி) இந்த பனாட்டுடன் பாணி உணவு வாசனைப்பொருட்கள் சேர்ப்பதன் மூலம் பாணிப்பனாட்டு உற்பத்தி செய்யப்படகின்றது.
பனம் சபையின் கைவினைப்போதனாசிரியர்கள் -2016
யாழ்ப்பாணம்-07
கிளிநொச்சி-04
முல்லைத்தீவு-02
வவுனியா-02
மன்னார்-03
புத்தளம்-02
திருகோணமலை-03
மட்டக்களப்பு-11
அம்பாறை-05
அம்பாந்தோட்டை-05
குருநாகல்-01
அனுராதபுரம்-01 மொத்தமாக 46 போதனாசிரியர்கள் உள்ளனர்
பயிற்சிகள்
பனையோலைக்கப்பணி
பனை ஈர்க்கு கைப்பணி
பனைநார் கைப்பணி
பயிற்சிக்காலம்
ஆரம்ப பயிற்சி-03 மாதங்கள்
உற்பத்திப்பயிற்சி-03மாதங்கள்
விசேடப்பயிற்சி-01மாதங்கள்
புதிய வடிவமைப்பு பயிற்சி-1வாரம்
வலுவூட்டல் பயிற்சிகள்-1-3நாட்கள்
விழிப்புனர்வுக் கருத்தரங்குகள்-பனங்கைப்பணியாளர்களுக்கானது.
கடந்த 2ஆண்டுகளில் அனுமதி பெறப்பட்டு தறிக்கப்பட்ட பனைமரங்கள்
மாவட்டம் 2014ஆண்டு 2015ஆண்டு
யாழ்ப்பாணம் 11654 12195
கிளிநொச்சி 6399 2818
முல்லைத்தீவு 477 168
வவுனியா 45 251
மன்னார் 1736 3938
திருகோணமலை 291 569
மட்டக்களப்பு - 1279
அம்பாறை - 18
புத்தளம் 05 17
அனுமதி பெறாமல் வெட்டப்பட்டவை தறிக்கப்பட்டவை இதைப்போல் எத்தனை மடங்கோ….!!!
கடந்த இரு ஆண்டுகளில் பனை அபிவிருத்திச்சபையினால் பின்வரும் மாவட்டங்களில் நடுகை செய்யப்பட்ட பனம்விதைகளின் எண்ணிக்கை…
மாவட்டம் 2014 ஆண்டு 2015ஆண்டு
யாழ்பாணம் 89450 608.700
மன்னார் - 127450
வவுனியா 50000 115.105
கிளிநொச்சி 50000 74000
முல்லைத்தீவு 66000 140000
திருகோணமலை 10000 435000
மட்டக்களப்பு 10000 35000
அம்பாறை 10000 10000
புத்தளம் 10000 15000
ஆம்பாந்தோட்டை 14000 15000
அநுராதபுரம் 5.500 -
மொத்தம் 382.700 1.183.755
மன்னார் மாவட்டத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் உற்பத்திகள் ஒரே பார்வையில்....
பனை உற்பத்திகள்-2012ஆண்டு 2013ஆண்டு 2014ஆண்டு 2015ஆண்டு 2016
பனைவெல்லம் 2953KG 3318kg 3877kg 4988kg 4055kg
கல்லாக்காரம் 84 26 60 35 50
பனங்களி 40 4791 4444 384 8173
பனாட்டு - 261 305 78 -
கைப்பணி 1561000 1186000 650000(5இலட்சம்)815000 670000
விலைப்பட்டியல்.....
- பனைவெல்லம் 1kg-750ரூபா(9-10லீட்டர் பதநீர்தான்-1kg கிலோ பனங்கட்டி)
- கல்லாக்காரம் 1kg-2500ரூபா
- சீவல் ஒடியல் 1kg-300-500ரூபா
- பனாட்டு 1kg-400-500ரூபா
- பனங்கழி 1kg-200-240ரூபா
- பதநீர் 1L-40ரூபா கொள்வனவு விலை
- பனம்மட்டை 1-(7-10 விற்பனை)
- பனங்கொட்டை 1-(2-5 வரை)
மன்னாரில் பனம் உற்பத்தி நடைபெறும் இடங்கள்
நறுவிலிக்குளம்
தலைமன்னார் படப்படி
பேசாலை-நடுக்குடா
கீளியன் குடியிருப்பு
தரவான்கோட்டை
வஞ்சியன் குளம்
சிறுக்கண்டல்
பண்டிவிரிச்சான்-50
பள்ளக்கமம்
அடம்பன்(பாளைப்பெருமாள்கட்டு)
சாந்திபுரம்
வட்டுப்பித்தான் மடு
மடுக்கரை
பாவிலுகுடியிருப்பு
கவியன் குடியிருப்பு
கட்டுக்காரன் குடியிருப்பு
மடுவில் பனைவளம்சார் உற்பத்திப்பொருட்கள் விற்பதற்கான விற்பனை நிலையம் உள்ளது.
- இரண்டு பனம்தும்புத்தொழிற்சாலை பூட்டியநிலையில் உள்ளது(உற்பத்தி செலவு அதிகமாம்)
- மன்னார்,மன்னார் கிழக்கு மன்னார் மேற்கு அடம்பன் நானாட்டான் முசலி உயிலங்குளம் போன்ற பிரதேசங்களில் உள்ள 25 கள்ளுக்கடைகளில் 1000 உறுப்பினர்கள் மூலம் ஒரு வருடத்திற்கு கள் உற்பத்தி.
- மன்னாரின் தனிச்சிறப்பு சீவல் ஒடியல் மட்டும் 1.லட்சம் கிலோ உற்பத்தி செய்யப்படுகின்றது.
- பதநீர் உற்பத்தி 1.இலட்சம் லீட்டர்
- பனங்கல்லாக்காரம்10000*675
- பனங்களி-பனைவள அபிவிருத்திச்சபை-8000லீட்டர்
- தனியார் மக்கள்-1000லீட்டர்
- 2016ஆண்டுக்கான கள் உற்பத்தி
- மன்னார் மேற்கு பேசாலை-374018 போத்தல்கள்
- அடம்பன் -253329 போத்தல்கள்
- மன்னார் கிழக்கு-321743போத்தல்கள்
- நானாட்டான்-முசலி-202926 போத்தல்கள்
- உயிலங்குளம்-39200 போத்தல்கள்
- மொத்தமாக1191216*70
- ஒரு ஆண்டிற்கு ஒடியல் சராசரியாக ஒரு லட்சம் கிலோ 100000-300
- பனம்பொருள் உற்பத்தி 10-15இலட்சம் பனைவள அபிவிருத்தி சபை
- பனம்பொருள் உற்பத்தி 15-30இலட்சம் தனியார்-மக்கள்
4000-150அடி-100-60.000.000 ரூபாய்
சிலாகையாக-4000-80அடி-50இலட்சம்
பனையை கற்பகத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம். பனையின் மாண்பை அறிந்த "கம்போடியா மக்கள்" அதை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதன் மதிப்பை உலகம் அறிய செய்கின்றனர்.
பனை மரம் உயரமாக மின்னலை உள்வாங்கி வேருக்கு கடத்தி பூமியில் உள்ள ர்iபா சநயஉவiஎவைல நடநஅநவெள எனப்படும் சோடியம் பொட்டாசியம் கால்சியம் போன்ற தனிமங்களை அயனியாகாக்குகிறது அந்த உலோக அயனிகளை உணவாக எடுக்கும்போது மனித உடலுக்கு பெரும் நன்மை அளிப்பதால் அதனை "கற்பத்தரு" என்றழைத்தனர் !
- சித்தமருத்துவத்தில் ஜெயநீர் மற்றும் முப்பு உருவாக்கும் போது கள்ளு பயன்படுத்துவது இதற்காக தான் முட்டியில் பூசபடும் சுண்ணாம்பை 2 நாழிகையில் அயனியாக மாற்றிவிடுகிறது பதநீர்.
- எழுதுகோலும் தெய்வம் என்றார் பாரதி. எனில் பனை ஏடும் தெய்வம் தானே?
- வரலாறு அளித்த கருவிகளில் முதன்மையானது கள்ளும் ஓலையும் இவை இல்லையேல் சங்கப்பாடல் இல்லை இதை நம்மால் மறுதளிக்க முடியுமா?
அறம்இமறம் என்று வேடம் தரித்துகொண்டு பனையின் கொடைகளை மறந்து போனோம் ஆனால் கம்போடியா தொல்குடிகள் அதன் மகத்துவம் அறிந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் உள்ளனர். அவர்களை போல நாமும் பனையில் இருக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி உலக தரத்திற்கு உயர்த்த முயலுவோம் .....
கள்ளும்-பதநீர் மறந்ததால் தமிழகம் இன்று நோயின் பிடியில்
1.கள் மற்றும் பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்படுகிறது அதனால் தமிழன் ஆண்மை குறைவிற்காக லேகியம் வாங்கி சாப்பிடும் நிலமைகள் வந்திருக்காது.
2. 40மூ அதிகமான சர்க்கரை நோயாளிகள் தமிழகத்தில் உருவாக காரணம் பனைவெல்லம் மறக்கடிக்கபட்டு கரும்புசர்கரை புகுத்தபட்டதனால் என்பதை மறுதளிக்க முடியுமா பணக்காரர்களின் வியாதியாக இருந்த சர்க்கரை நோயை அனைவருக்கும் பொதுவுடமை ஆக்கியது பனங்கருப்பட்டிக்கு மாற்றாக கரும்பு சர்க்கரையை பயன்படுத்தியதே ???
3.பதநீர் அருந்திய பெண்களுக்கு மூட்டுவலிஇமாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு இல்லாமல் இருந்தது மகப்பேறு காலங்களில் பால் சுரப்பு மிக அதிகமாக இருந்தன கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள் பல் சம்மந்தமான குறைபாடுகள் இருக்கவேஇருக்காது .
4.பதநீர் அருந்தும் ஆண்களுக்கு முடி நரைக்காது 60 வயதிற்கு மேல் தான் நரைவரும்
5.வயோதிகம் ஏற்படாது இளமையாக இருக்கலாம்இ இன்று பெருமளவு பிரச்சினை ஆண்களின் விந்துக்களில் உள்ள உயிரணு குறைபாட்டை பதநீர் சரி செய்யும் அதற்கு காரணம் பதநீர் மற்றும் கள்ளில் மிகுதியாக உள்ள இரும்புஇகால்சியம்இஅமினோ அமிலம் மற்றும் புரதசத்துக்கள்
பனையின் நற்பண்புகள் தமிழர்கள் அறியாத ஒன்றல்ல ...
நோய்களை உருவாக்கும் உக்தி அரசியல் தலைவர்கள் துணையுடன் நடைமுறைபடுத்தும் வணிகர் நலம் சார்ந்தது என்று.
கொள்ளையர்களுக்கு எப்போதும் நிறம் ஒன்றுதான் அன்று வெள்ளையாக(ஆங்கிலேயன்) இருந்தான் இப்போது (..............)
மிதக்குடியன் ஆன தமிழன் எதற்காக மிகைகுடியன் ஆக்கபட்டான் என்று உங்களுக்குகே தெரியும் ????
பனைமரத்தின் பங்களிப்பு அளப்பரியது.
வெயில் காலத்தில் நம்மை பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம் கோடையில நாம் உடலுக்கு தேவையான நிர்ச்சத்துக்களை வாரிவழங்கும் நுங்கு பனைவெல்லம் பனங்கற்கண்டு பனங்கிழங்கு மட்டை ஓலை என பனையால் கிடைக்கும் அனைத்துமே மருத்துவக்குணம் நிறைந்தவை வாய்ந்தவை தமிழ் பாரம்பரிய சித்தமருத்துவத்தில் பனைமரத்தின் பங்களிப்பு அளப்பரியது.
- நுங்கில் அதிகளவு வைட்டமின் பி.சி இரும்புச்சத்து கல்சியம் துத்தநாகம் சோடியம் மக்னீசியம் பொட்டாசியம் தயமின் அஸ்கார்பிக்அமிலம் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படகின்றன
- நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையைக்குறைக்கும் தன்மை அதிகம் நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும் மலர்ச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டக்குமே அருமருந்து
- சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கி விடும் இரத்தச்சோகையுள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகும் உடல் சுறுசுறுப்பாகும்
- நுங்கில் ஆந்த்யுசைன் என்னும் இரசாயணம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகபுற்றுநோய்க்கட்டிகள் வருவதை தடுக்கும் வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோயினை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத்தரும்
பனையை 80வயதுக்கு மேல் வெட்டலாம் காரணம் அதன் பயன் தரும் நிலை குறைவு என்பதாலும் அதற்குபதிலாக புதிய பனங்கன்று ஒன்றை உருவாக்கவேண்டும் அத்தோடு அவ்வாறான 80வயதுக்கு மேற்பட்ட பனைமரங்கள் என்றால் எல்லாவற்றிலும் தப்பி நிற்பது 100இற்கு இரண்டு பனைமரங்கள் தான்.
பனைவள அபிவருத்திச்சபையினால் குறிப்பாக மன்னாரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விண்ணப்ப படிவமானது பல அம்சங்களை உள்ளடக்கியதாக வந்துள்ளது. அந்த விண்ணப்பபடிவத்தின் படி ஒரு பனை தறிப்பதற்கான அனுமதியினை பெறுவது என்றால் காணி உரிமையாளர் பிரதானமானவராகவும் பெறுபவர் கிராமசேவகர் பிரதேசசெயலாளர் பனைவளஅபிவிருத்தி சபை அலுவலர் பொலிஸ்அதிகாரி என பலரின் பார்வையிலும் பரிசிலிப்பின் பின்னும் தான் பனைமரங்கள் தறிக்கலாம் .
இப்படியான செயற்பாடு கொண்டு வந்ததின் பின்னர் கடந்தாண்டைவிட தற்போது பனைதறிப்பதற்கான அனுமதி கோரல் குறைந்துள்ளது. இருப்பினும் பனைமரங்கள் தறிப்பதும் அழிப்பதும் குறைந்த பாடில்லை ஒரு அனுமதியினை வைத்துக்கொண்டு 5 பனைகள் தறிக்களாம் என்றால் 25பனைக்கு மேல் தறிக்கப்படுகின்றது.
- தடுக்கமுடியாமல் உள்ளதாம் ஏன்…???
- பாதுகாக்க வேண்டியவர்களே துணைபோகின்றார்களா…???
- இல்லை அவர்களுக்கு தெரியாமல் நடைபெறுகின்றதா…???
- எது எப்படி இருப்பினும் அழிக்கப்படுவது எமது வளம் மட்டுமல்ல சிலரின் தேவைக்காக பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கபடுகின்றது.
பனைவளத்தின் கைப்பணியினால் முன்னேறி தனது மகளை பட்டதாரியாக்கிய தாயின் கதையும் மன்னார் மண்ணில் உள்ளது.
பனைவளக்கைப்பணியினால் தேசியரீதியல் பல விருதுகளை பெற்று மன்னார்க்கு பெருமை சேர்த்துள்ளனர்...
எனவே மன்னார் மாவட்டதில் உள்ள அனைவரும் ஒன்றிணையவேண்டும் எமது மாவட்டத்தினை பிரதிநிதிப்படுத்துகின்ற அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாணசபை உறுப்பினர்கள் மன்னார் மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் கிராமசேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்கள் சிறப்பான முறையில் செயற்பட்டாலே ஒளிய எமது அழிந்து கொண்டு இருக்கின்ற பனைவளத்தினை காக்க முடியாது இப்படியே போனால் பனைமரத்தினை பார்க்கவே முடியாது.
தமிழர்களின் பாரம்பரியம் எல்லாம் வெறும் பத்திரத்தில் தான் பார்க்கவேண்டி இருக்கும் இனிவரும்காலத்தில….
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை நாங்கள் தான்….முயல்வதே இல்லையே….
மன்னார் அபிவிருத்தியினை விரும்பும்
-வை.கஜேந்திரன்-

மன்னாரில் பனைமரங்கள் பெருமளவில் அழிப்பு பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு….சிறப்புக்கட்டுரை-வை.கஜேந்திரன்
Reviewed by Author
on
April 22, 2017
Rating:

No comments:
Post a Comment