கிளிநொச்சி மாணவியை அருகில் அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதி...
கிளிநொச்சியைச் சேர்ந்த பாஸ்கரன் சியானுகா என்ற மாணவியின் உரையை கேட்ட ஜனாதிபதி அவரை அருகில் அழைத்து உரையாடியுள்ளார்.
தேசிய பால்சார் உற்பத்தி கைத்தொழிலுக்கு பாரிய முதலீட்டை சேர்க்கும் வகையில் மீரிகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கொத்மலை புதிய பாற்பண்ணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய பாற்பண்ணையை திறந்து வைத்து அதனை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது “சருதின” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில்களும், மடிக் கணனிகளும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த புலமைப்பரிசிலை பெற்ற கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சியானுகா என்ற மாணவியினால் உரையொன்று ஆற்றப்பட்டது.
பின்னர் குறித்த மாணவியை தமது அருகில் அழைத்த ஜனாதிபதி அம்மாணவியிடம் பாடசாலையின் விபரங்களைக் கேட்டறிந்தார்.
தனது பாடசாலையில் காணப்படும் சில குறைகளை அந்த மாணவி ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், அவற்றை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, பீ.ஹெரிசன், லுவிஸ் பேஜ், பிரதி தலைவர் ரஞ்சித் பேஜ் உள்ளிட்டோர் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாணவியை அருகில் அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதி...
Reviewed by Author
on
April 03, 2017
Rating:
Reviewed by Author
on
April 03, 2017
Rating:


No comments:
Post a Comment