கேப்பாப்பிலவு போராட்டம்; முதலமைச்சர் சந்திப்பு....
இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் நேற்று 51 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கேப்பாப்பிலவில் இடம்பெற்று வரும் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்பிரகாரம் 111 ஏக்கர் காணிகளை மாத்திரமே தற்போது விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியுள்ள போதிலும்,
காணி விடுவிப்புக்கான கால எல்லை குறித்த உறுதிமொழி வழங்கப்படாமை தொடர்பாகவும் பகுதியளவான காணி விடுப்பு தமக்கு தேவையில்லை எனவும் தெரிவித்த மக்கள் தமது வாழ்வாதாரங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதை நேரில் கண்டு மிகவும் கவலையடைந்தாகவும் தமது காணிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் தேங்காய்களை பறித்து வைத்திருப்பதாகவும் தமது காணிகளில் இராணுவத்தினர் ஆடம்பர வாழ்க்கை நடத்துவதாகவும் தாம் வீதியில் கிடந்தது அலைக்கழிவதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது மக்களுடன் உரையாடிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மக்கள் மன உறுதியோடு போராடுமாறும் போராட்டத்தின் மூலமே தீர்வு காணமுடியும் எனவும் தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி எதிர்வரும் மே மாதம் 17 திகதி அவரை தான் சந்திப்பதற்கு நேரம் தந்துள்ளதாகவும் இந்த சந்திப்பில் காணி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள் தொடர்பில் தன்னால் எடுத்துரைக்கப்பட முடியும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கேப்பாப்பிலவு போராட்டம்; முதலமைச்சர் சந்திப்பு....
Reviewed by Author
on
April 21, 2017
Rating:

No comments:
Post a Comment