மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்! பென்டகனின் இரகசியத் திட்டம் அம்பலம்!! அமெரிக்காவின் எச்சரிக்கை மணி..
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்நேரமும் போர் ஏற்படும் என்ற எதிர்வுகூறல்கள் உலகெங்கும் பரவிவரும் நிலையில், அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது, உண்மையில் வடகொரியாவுடன் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள சச்சரவுகள் என்ன?
மேலும், அமெரிக்கா முன் எப்போதும் இல்லாத வகையில் தனது ஆயுதங்களை பிரயோகித்துக்கொண்டிருக்கின்றது. உலகை ஆட்டிப்படைக்கும் அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போவது யார்? மூன்றாம் உலகப்போர் ஏற்படுமா? போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடை கிடைக்காத நிலையில்
வடகொரியா தனது அடுத்த ஏவுகணை சோதனையை இன்னும் பத்து நாட்களில் நடத்தி முடிப்பதற்கு திட்டமிட்டருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜோங் சில அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணுகுண்டு ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வந்தார்.
இதற்கு அமெரிக்கா, தென் கொரியா மற்றும் சீனா உட்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், தங்களுடைய சோதனைகளை வடகொரிய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுவரை ஐந்து சோதனைகளை மேற்கொண்ட, வடகொரியா நேற்று ஆறாவது முறையாக புதிய ஏவுகணை சோதனையை மேற்கொண்டது.
வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை என்று நம்பப்படும் ஏவுகணையை கண்டுபிடித்து பின்தொடர்ந்ததாகவும் அது தோல்வியில் முடிந்துவிட்டதாகவும், அந்த ஏவுகணை ஏவப்பட்டவுடனேயே வெடித்துச்சிதறிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் வடகொரியாவின் ஏவுகணை முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் அடுத்த ஏவுகணை சோதனையை இன்னும் பத்து நாளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று வடகொரியா திட்டமிட்டுள்ளதாக, பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் இன்னும் பத்து நாளில் புதிய ஏவுகணை சோதனையை வடகொரிய வெற்றிகரமாக செய்து முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் வடகொரிய ஜனாதிபதி அதை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக, செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியா தன்னுடைய ஆறாவது ஏவுகணை சோதனை தோல்வியடைந்த போதிலும், தன்னுடைய முயற்சியில் பின்வாங்குவதாக தெரியவில்லை. வடகொரியாவின் இந்த செயல்பாடுகளை சீனா கண்டிக்காவிட்டால், அமெரிக்கா சில அதிரடி முடிவுகளை எடுக்கும் என்று அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் எந்த நேரத்திலும் போர் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அந்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்! பென்டகனின் இரகசியத் திட்டம் அம்பலம்!! அமெரிக்காவின் எச்சரிக்கை மணி..
Reviewed by Author
on
April 18, 2017
Rating:

No comments:
Post a Comment