உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக மகுடம் சூட்டப்பட்டார் விராட் கோஹ்லி!
2016ம் ஆண்டின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இந்திய அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான விராட் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரபல விஸ்டன் கிரிக்கெட் பத்திரிக்கையே உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லியை அறிவித்து புதிய மகுடத்தை சூட்டியுள்ளது.
இந்திய நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வந்த கோஹ்லி, இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு கோஹ்லி 1215 டெஸ்ட் ஓட்டங்கள் விளாசினார். இதில் 75.93 என்ற சராசரி எடுத்துள்ளார். 10 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 739 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 92.37 ஆகும். டி20 கிரிக்கெட்டில் 642 ஓட்டங்களை 106.83 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
விராட் கோஹ்லிக்கு முன்பாக இந்திய அணியின் விரேந்தர் சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.
2017 விஸ்டன் கிரிகெட்டர்ஸ் அல்மனாக் அட்டைப்படத்தில் விராட் கோஹ்லி இடம் பெற்றுள்ளார். டெண்டுல்கருக்கு பிறகு விஸ்டன் அட்டைப்பக்கத்தில் இடம் பிடிக்கும் 2வது இந்திய வீரர் விராட்கோஹ்லி ஆவார்.
உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக மகுடம் சூட்டப்பட்டார் விராட் கோஹ்லி!
Reviewed by Author
on
April 06, 2017
Rating:
Reviewed by Author
on
April 06, 2017
Rating:


No comments:
Post a Comment