எம்மோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்! உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு...
அனைத்து நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் ஒரே கரையோரம் - ஒரே பாதை என்னும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து நாடுகளும் தம்முடன் கைகோர்க்குமாறு சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒரே கரையோரம் - ஒரே பாதை என்னும் தொனிப்பொருளின் கீழ் சீன தேசிய கருத்தரங்கு மத்திய நிலையத்தில் நடைபெற்ற மாநாட்டை அங்குரார்பணம் செய்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இம் மாநாட்டிற்கு 29 நாடுகள், நூறுக்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகள், பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சீன ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் பாதுகாப்பு சபையினால் முன்வைத்த முக்கிய யோசனையின் பிரகாரம் ஒரே கரையோரம் - ஒரே பாதை என்னும் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி உதவிகளை சீனா வழங்கும். இதன்பிரகாரம் பட்டுப்பாதை நிதியத்திற்கு 100 பில்லியன் யுவான் ஒதுக்கியுள்ளோம். அத்துடன் ஒரே கரையோரம் - ஒரே பாதை என்னும் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் முதலீடுகளை செய்துள்ள சீன வர்த்தகர்களுக்கு 300 பில்லியன் யுவான் ஒதுக்கீடு செய்துள்ளோம்.
மேலும் உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்தி, அனுசக்தி வள உற்பத்தி மற்றும் நிதி ஒத்துழைப்புகளுக்கு வலுவூட்டுவதற்கு சீன தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏற்றுமதி - இறக்குமதி வங்கிகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளோம் என்றார்.
எம்மோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்! உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு...
Reviewed by Author
on
May 15, 2017
Rating:
Reviewed by Author
on
May 15, 2017
Rating:


No comments:
Post a Comment