30 பேர் பரிதாபமாக பலி நடுக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு....
லிபியாவில் இருந்து இத்தாலிக்கு 700 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு அதிக பாரம் தாங்காமல் நடுக்கடலில் கவிழ்ந்ததில் 30 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வறுமை மற்றும் போர் காரணமாக அங்குள்ள மக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள்.
கடல் வழியில் ஆபத்தான பயணத்தையே இவர்கள் அதிகம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் பல அசம்பாவித சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், லிபியாவிலிருந்து இத்தாலிக்கு 700 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு சென்று கொண்டிருந்தது.
நடுக்கடலில் போய் கொண்டிருந்த போது அதிக பாரம் காரணமாக படகு ஒரு பக்கமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது, இதில் 200 பேர் வரை கடலில் விழுந்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த கடற்படையினர் கடலில் விழுந்தவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் பல்வேறு இடங்களில் தோராயமாக 1,300 அகதிகள் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
30 பேர் பரிதாபமாக பலி நடுக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு....
Reviewed by Author
on
May 25, 2017
Rating:

No comments:
Post a Comment