ஆலங்குளம் புதிய குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா...
மன்னார் மறைமாவட்ட காத்தன்குளம் பங்கின் கீழுள்ள ஆலங்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயமாகிய குழந்தை இயேசு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா கடந்த 20-05-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களது தலைமையில், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி விக்டர் சோசை, வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ஜெயபாலன், காத்தான்குளம் பங்குத்தந்தை அருட் பணி வசந்தகுமார் ஆகியோரது பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது.
இவ் நிகழ்விற்கு பங்குமக்களதும் பங்குத்தந்தையினதும் அன்பான அழைப்பின்பேரில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் ஏ.எஸ்.பிறீமுஸ் சிராய்வா ஆகியோருடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்கள் பொதுநிலையினர் என பலரும் கலந்து கலந்து சிறப்பித்தனர்.

ஆலங்குளம் புதிய குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா...
Reviewed by Author
on
May 22, 2017
Rating:

No comments:
Post a Comment