காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய தமிழ் தேசிய மே தினம் கிளிநொச்சியில்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில் தமிழ் தேசிய மே தினம் கிளிநொச்சியில் நடைபெறுகின்றது.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றில் ஆரம்பிக்கப்பட்டு, டிப்போச் சந்தியை சென்றடைந்தது.
இதனையடுத்து, அங்கு பொதுக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊர்வலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளை சித்தரிக்கும் வகையில் ஊர்திகளும் காணப்பட்டன.
இந்த மே தின நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை உள்ளிட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட தொழிலாளர்களின் விடுதலையை வலியுறுத்தி மே தினம்
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தொழிலாளர்களின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் இன்று மே தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமுன்றலில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஊர்திகள் பேரணியாக கொண்டு செல்லப்பட்டன.
குறித்த ஊர்திகள் பேரணியாக நகர்ந்து ஏ-9 வீதிவழியாக டிப்போச்சந்தி வரை சென்றதுடன், அங்கு மே தின கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா, சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்போராட்டம் இன்று 71ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய தமிழ் தேசிய மே தினம் கிளிநொச்சியில்...
Reviewed by Author
on
May 01, 2017
Rating:

No comments:
Post a Comment