அண்மைய செய்திகள்

recent
-

சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்ற கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்-நில அளவையும் இடை நிறுத்தம்.(படம்)

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை கடற்படை முகாமிற்கு முன்பாக சிலாவத்துறை பிரதேச மக்கள் மற்றும் வர்த்தக சங்க உரிமையாளர்கள் மற்றும் காணி மீட்பு குழுவினர் ஒன்றாக சேர்ந்து சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்ற கோரியும்,சிலாவத்துறை காணியினை நில அளவை செய்வதை நிறுத்த கோரி இன்று புதன் கிழமை காலை சிலாவத்துறை கடற்படை முகாம் அமைந்துள்ள காணிப்பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

சிலாவத்துறை கடற்படை முகாம் அமைந்துள்ள காணி எங்களுடைய பாரம்பரிய காணியாக இருந்து வந்து வேலை இலங்கை அரசாங்கத்தின் கடற்படையினர் அத்துமீறி முகாமை அமைத்து இருந்து வருகின்றார்.இதில் தமிழ் மக்களின் காணி கூட இருக்கின்றது.
அதனை கூட பெறமுடியாத நிலையில் அப்பாவி தமிழ் மக்கள் இருந்து வருகின்றார்கள்.
சிலாவத்துறை கடற்படை முகாமை நில அளவை செய்ய முசலி பிரதேச காணி கிளையினர் மற்றும் நில அளவை அதிகாரிகள் வருகை தந்தார்கள் எனவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

இந்த காணியினை நில அளவை செய்து இலங்கை அரசாங்கம் சொந்தமாக்கி கொள்ள உள்ளதாகவும்,நாங்கள் அறிந்து அதனை தடுக்கும் முகமாகவே! ஆர்ப்பாட்டம் செய்தோம் எனவும், இது தொடர்பில் பல முஸ்லிம்,தமிழ் அரசியல்வாதிகளிடம் கோரிக்கையினை வழங்கிய போதும் எங்கள் பிரச்சினை தொடர்பில் இது வரைக்கும் உரிய தீர்வினை பெற்று தரவில்லை எனவும் அந்த மக்கள் விசனம் தெரிவித்தார்.

மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து நில அளவை கைவிடப்பட்ட நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து சென்றாமை குறிப்பிடத்தக்கது.






சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்ற கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்-நில அளவையும் இடை நிறுத்தம்.(படம்) Reviewed by NEWMANNAR on May 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.