முதற்தடவையாக முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் சம்பந்தன் -நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தனின் உரையால் சற்று குழப்பம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும் போது கூட்டத்தில் இருந்த ஒருவரால் சற்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று நடைபெற்று வருகின்றன. இதன்போது எதிர்க்கட்சித்தலைவர் உரை நிகழ்த்தினார்.
இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த ஒருவர் “ஐயா பயங்கரவாத சட்டம்….” என்று சம்பந்தனிடம் கேள்விகளை கேட்க ஆயத்தமானார்.
இதன்போது அங்கிருந்தவர்கள் “எதுவும் கேட்க வேண்டாம், அரசியல் பற்றி கதைக்க வேண்டாம், இது முள்ளிவாய்க்கால் முற்றம், இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என சற்று குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் அரசில் பேசுவதாகவும், இங்கு வந்து அரசியல் பேச வேண்டாம். இது எமது பிள்ளைகள் உயிர் நீத்த இடம். இங்கு வந்தும் உங்களது அரசியல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வெண்டாம் என அங்கிருந்த தாய் ஒருவர் ஆவேசமாக தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று நடைபெற்று வருகின்றன. இதன்போது எதிர்க்கட்சித்தலைவர் உரை நிகழ்த்தினார்.
இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த ஒருவர் “ஐயா பயங்கரவாத சட்டம்….” என்று சம்பந்தனிடம் கேள்விகளை கேட்க ஆயத்தமானார்.
இதன்போது அங்கிருந்தவர்கள் “எதுவும் கேட்க வேண்டாம், அரசியல் பற்றி கதைக்க வேண்டாம், இது முள்ளிவாய்க்கால் முற்றம், இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என சற்று குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் அரசில் பேசுவதாகவும், இங்கு வந்து அரசியல் பேச வேண்டாம். இது எமது பிள்ளைகள் உயிர் நீத்த இடம். இங்கு வந்தும் உங்களது அரசியல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வெண்டாம் என அங்கிருந்த தாய் ஒருவர் ஆவேசமாக தெரிவித்தார்.
முதற்தடவையாக முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் சம்பந்தன் -நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தனின் உரையால் சற்று குழப்பம்
Reviewed by NEWMANNAR
on
May 18, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 18, 2017
Rating:

No comments:
Post a Comment