வெற்றியடைந்த ஏவுகணை சோதனை: திடுக்கிடும் உத்தரவை பிறப்பித்த வடகொரியா....
வட கொரியா நேற்று மேற்கொண்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையொட்டி, சக்தி வாய்ந்த புதிய ஏவுகணைகளை உற்பத்தி செய்ய அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார்.
வட கொரியா, உலக நாடுகள் மற்றும் ஐ.நா பாதுகாப்பு குழுவின் எச்சரிக்கையை மீறி கடந்த வாரம் இரண்டு முறை ஏவுகணை சோதனையை நடத்தியது.
இந்த இரண்டு ஏவுகணை சோதனைகளும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து சக்தி வாய்ந்த மேலும் சில ஏவுகணைகளை உற்பத்தி செய்ய வட கொரிய தலைவர் கிம் ஜாங் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சக்தி வாய்ந்த ஏவுகணைகள், அமெரிக்காவுடனான எந்தவொரு மோதலையும் எதிர்கொள்ள சரியானதாக இருக்கும் என கிம் ஜாங் நம்புகிறார்.
மேலும், இது போன்ற ஏவுகணைகள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தனது சகாக்களிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து வட கொரியாவின் செய்தி நிறுவனமான KCNA தெரிவிக்கையில், வட கொரியா சோதனை செய்து வெற்றி கண்ட Pukguksong-2 ரக ஏவுகணை சரியான அளவில் ஜப்பான் கடலில் பாய்ந்தது.
இதை தொடர்ந்தே, கிம் ஜாங் இது சிறந்த ஏவுகணை என ஒப்புதல் வழங்கியதாக தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று நடந்த ஏவுகணை சோதனை மூலம், எந்தவொரு போர் நிலையையும் எங்கள் ஏவுகணை சமாளிக்கும் என்பது உறுதியாகியுள்ளதாக KCNA கூறியுள்ளது.
இது போன்ற ஏவுகணைகள் முழு பயன்பாட்டுக்கு வந்தால், அமெரிக்காவின் மிகப்பெரிய வெளிநாட்டு கடற்படை தளத்தை கூட அது சென்றடையும் என நம்பப்படுகிறது.
வெற்றியடைந்த ஏவுகணை சோதனை: திடுக்கிடும் உத்தரவை பிறப்பித்த வடகொரியா....
Reviewed by Author
on
May 22, 2017
Rating:

No comments:
Post a Comment